
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தி ல் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை (ED) விசாரணையில் தெரிய வந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், அதற்கான முறையான ரசீதுகள் வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் குவிந்துள்ளன.சில இடங்களில் QR குறியீடு மற்றும் Google Pay போன்ற வசதிகள் இருந்தாலும், அங்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் டாஸ்மாக் ஊழல் விவகாரம், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட சமயத்தில் இருந்தே அமலாக்கத்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரை சந்திக்க சென்றிருந்தார். அப்போது அவருடன் இரு புதிய நபர்களை அழைத்துச் சென்றது அமலாக்கத்துறையின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அந்த நபர்களை ரகசியமாக கண்காணித்து விசாரித்ததில், டாஸ்மாக் ஊழல் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் தீவிரமாக கண்காணித்து, ஆதாரங்களை சேகரித்து வருகிறது. சில தனியார் அமைப்புகளும் இந்த விசாரணைக்கு உதவியதாகவும், இதன் மூலமே திரையுலக பிரபலங்களின் பெயர்கள் பொதுவெளியில் கசிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
இந்த ஊழலின் முக்கிய புள்ளியாக சந்தேகிக்கப்படும் உதயநிதியின் நெருங்கிய நண்பர் தொழிலதிபர் ரத்தீஷ், அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு முன்னரே நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க அமலாக்கத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ரத்தீஷின் பகட்டான வாழ்க்கை மற்றும் விருந்து கலாச்சாரம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் ஊழலின் மையப்புள்ளியாக கருதப்படும் அவர், தனது ஆடம்பர வாழ்க்கைக்கும், பணத்தை தாராளமாக செலவழிக்கும் பழக்கத்திற்கும் பெயர் போனவர் என்று கூறப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனைக்கு முந்தைய நாள் சென்னையில் நடைபெற்ற ஒரு ஆடம்பர விருந்தில் ரத்தீஷ் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விருந்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள், ரஷ்யாவைச் சேர்ந்த மாடல் அழகிகள், போதைப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பரிசுகள் இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு விருந்தினருக்கும் சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள், ஆடம்பர கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த கைப்பைகள் மற்றும் வாசனை திரவியங்கள் வழங்கப்பட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த விருந்தில் இளைஞர்கள் மனதில் டிராகன் மாதிரி பிரமாண்டமாக இடத்தை பிடித்துவிட்டு ஒரு நடிகையோடு மேலும் சில பிரபலங்கள் கலந்துகொண்டதாகவும், ஒரு இரவு விருந்துக்காக அந்த நடிகைக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன.
தமிழ் சினிமாவில் சமீபத்தில்தான் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே வெகு பிரபலமான அந்த நடிகை, இந்த டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரத்தீஷ் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒரு பெண் காரில் வந்து இறங்கி உள்ளே செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அந்த பெண்ணின் சிகை அலங்காரம் மற்றும் உடல்வாகு குறிப்பிட்ட இந்த நடிகையோடு ஒத்திருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள் . இதுகுறித்து அந்த நடிகை இதுவரை எந்தவித மறுப்பும் தெரிவிக்காதது மேலும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
டாஸ்மாக் ஊழல் விவகாரம் தமிழக அரசியல் மற்றும் சினிமா துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரத்தீஷ் போன்ற தொழிலதிபர்களும், தொடை அழகி போன்ற பிரபல நடிகையும் இதில் சிக்கியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறையின் முழுமையான விசாரணை முடிவில் தான் உண்மை நிலவரம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.