24 special

இஸ்லாமிய நாடுகளை புறக்கணிக்கிறதா இந்தியா..?

Modi and putin
Modi and putin

புதுதில்லி : சமூக வலைத்தளங்களில் கேலியாகவும் உள்நோக்கத்துடனும் சில கேள்விகளை நெட்டிசன்கள் முன்வைப்பதுண்டு. அதில் ஒன்று இஸ்லாமிய மக்களை வெறுக்கும் நீங்கள் ஏன் இஸ்லாமிய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறீர்கள் என. அது தற்போது நடந்தேறிவிட்டது. அரேபிய நாடுகளை புறந்தள்ளி ரஷ்யா இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் சப்ளையராக உருவெடுத்துள்ளது.


உக்ரைன் ரஷ்யா மோதலை தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பாளர்கள் அதிக தள்ளுபடி விலையில் பெறுவதால் சவூதி அரேபியாவை பின்னுக்குத்தள்ளி ஈராக்கிற்கு பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் வழங்குநராக மாறியுள்ளதாக தொழில்துறை வர்த்தக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள சுத்திகரிப்புநிறுவனங்கள் கடந்த மே மாதத்தில் மட்டும் தோராயமாக 25 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்கியுள்ளதாக தெரிகிறது. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 16 சதவிகிதம் அதிகமாகும்.கடந்த ஏப்ரல் மாதத்தில் கடல்வழி இறக்குமதி மூலமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் 5 சதவிகிதம் அதிகரித்திருந்தது. 

இது 2020-21 காலாண்டில் சிறிதளவு உயர்நது காணப்பட்டது. ஆனால் ரஷ்யாவின் சலுகைகளை தொடர்ந்து தற்போது ரஷ்ய இந்திய வர்த்தகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாகும். கடந்த மே மாதம் எண்ணெய் அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதில் " இந்தியாவின் மொத்த நுகர்வுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவிடமிருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் எரிசக்தி கொள்முதல் குறைவாகவே உள்ளது" என அதில் குறிப்பிட்டிருந்தது. கடந்த மே மாதம் ஈராக் இந்தியாவிற்கான எண்ணெய் வழங்குநர் நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது. தற்போது ரஷ்யாவை அடுத்து சவூதி அரேபியா மூன்றாவது பெரிய வழங்குநராக உள்ளது. 

உலக அளவில் எரிசக்தி மூலங்களின் விலையேறிக்கொண்டிருக்கையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் தள்ளுபடியை இந்தியா சாதுர்யமாக பயன்படுத்திக்கொண்டது.கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்து செலவு முன்பு பாதகமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த செலவையும் ரஷ்யா ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது மேலும் எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இந்தியா ரஷ்யாவிடமிருந்து பேரலுக்கு 30 டாலர்கள் வரை குறைத்து வாங்கியுள்ளது.