24 special

எம்.ஆர்.எப்.ஏ போர்விமானங்கள் கொள்முதலை குறைக்கிறதா இந்தியா..?

MRFA
MRFA

புதுதில்லி : இந்திய விமானப்படை தனது மிகப்பெரிய போர்விமான கொள்முதல்திட்டத்தை குறைத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விமானப்படை தலைமை அலுவலக தகவல்களின் படி மேக் இன் இந்தியா திட்டத்தின் தேவைகளுக்கேற்ப வெளிநாட்டு சப்ளையர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் கொழுமுதல் வரைவு மாதிரியை வெளியிட்டுள்ளது விமானப்படை.


20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 114 வெளிநாட்டு ஜென்டவிமானங்களுக்கான கொள்முதல் திட்டத்தை இந்தியா முதலில் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை பாதியாக 57 என குறைத்துவிட்டது. இந்த மல்டி ரோல் பைட்டர் ஏர்க்ராப்ட் விமானங்கள் கொள்முதல் பாதியாக குறைக்கப்பட்டதால் வெளிநாட்டு நிறுவனங்கள் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு இணங்கும் என இந்தியா எதிர்பார்ப்பதாக BW BUSSINESS WORLD  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ரக ஜெட் விமானங்களை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே முதலில் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.கூட்டாண்மை (SP) மாதிரியின் கீழ் இந்தியாவில் தயாரிக்கும் அசல் மூல திட்டத்தை இந்தியா கைவிட்டபின் வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து 2020 குளோபல் பை திட்டத்தின் கீழ் தயாரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

தற்போது ஆர்டர் செய்யப்பட்டுள்ள 57 போர்விமானங்களும் வெளிநாட்டு OEMஇலிருந்து இந்திய நிறுவனத்திற்கு தொழிநுட்பத்தை மாற்றி அதன்மூலம் விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளது. இதனால் இந்தியாவிற்கு இரட்டை லாபம் என கருதப்படுகிறது. ராணுவத்தேவைகளை பூர்த்தி செய்ய பாதுகாப்பு இறக்குமதிகளை குறைக்கவும் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகப்படுத்தவும் ஆத்மநிர்பார் பரத் கொள்கையின்படி அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தியாக இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இந்திய ஜெட் போர்விமானங்களுக்கான உலகளாவிய போட்டியில் ஐரோப்பா, பிரான்சு, ரஷ்யா மற்றும் ஜெர்மன் நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன. முன்னரே ஆயுததயாரிப்பில் சுயசார்புநிலையை அடைந்து வரும் இந்தியா மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களை 30 சதவிகிதம் இந்தியாவில் முதலீடு செய்யவைப்பதின் மூலம் பொருளாதாரத்தை மேலும் மேபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.