24 special

நக்வியை கழற்றிவிட்டதா பிஜேபி..? குழம்பும் எதிர்க்கட்சிகள்..!

modi, bjp
modi, bjp

புதுடில்லி : அரசியல் கட்சிகளில் எப்போதும் தனக்கென அதிரடி பாணியை கொண்ட கட்சி பிஜேபி என எதிர்கட்சியினரே புகழ்ந்துவருகின்றனர். பிஜேபியை பொறுத்த மட்டில் தலைவர் தொண்டராகலாம். தொண்டர் தலைவராக உருவெடுக்கலாம். அதேபோல சீட் கிடைக்கவில்லையென்று முணுமுணுப்பதும் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லும்போது புலம்புவதும் பிஜேபியில் எப்போதும் இல்லை.


இந்நிலையில் ஒரு அமைச்சர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்கவேண்டும் என்பது விதி. இதில் முக்கிய அமைச்சரின் பெயர் விடுபட்டு போயிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வருகிற ஜூன் 10 அன்று ராஜ்யசபா இரு ஆண்டுகளுக்கான தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் முக்தார் அப்பாஸ் நக்வி பெயர் இடம்பெறவில்லை.

இதுகுறித்த கேள்விகளுக்கு பிஜேபி மூத்த நிர்வாகிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். மேலும் அவர் பெயரை மீண்டும் பரிசீலிப்பார்களா என்ற யூகங்கள் எழுந்துள்ளன. பிஜேபி ராஜ்யசபா தேர்தலுக்கான 22பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த திங்களன்று கர்நாடக பிஜேபி தலைமை எம்.எல்.சி லால் சிங்கை வேட்பாளராக அறிவித்துள்ளது. 

தெலுங்கானா தலைமை  ஓபிசி மோர்ச்சா தலைவர் மற்றும் ஷாஜகான்ப்பூர் முன்னாள் எம்பியான லக்ஷ்மணை அறிவித்துள்ளது. அதேபோல உத்திரப்பிரதேசத்திலிருந்து இரண்டு இடங்களுக்கு மிதிலேஷ் குமார் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து மாநில பிஜேபி துணைத்தலைவர் சுமித்ரா வால்மீகி ஆகியோர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ராஜ்யசபா தேர்தல் ஜூன் 23 அன்று நடைபெற உள்ளநிலையில் உத்திரபிரதேசம் ராம்பூரின் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் முக்தர் அப்பாஸ் நக்வி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவரது பெயர் முதற்கட்ட பட்டியலில் இடம்பெறவில்லை. கடந்தவாரம் மேல்சபையின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள மூன்று அமைச்சர்களில் நக்வியும் ஒருவர்.

இந்நிலையில் ஜூன் 10 அன்று நடைபெற உள்ள தேர்தலில் சுயேச்சை வேட்பாளரான ஊடக அதிபரான சுபாஷ் சந்திராவை பிஜேபி ஆதரிக்க உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் ஜார்கண்டிலிருந்து முக்தார் அப்பாஸ் நக்வி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.