இந்தியா : இலங்கையில் தற்போதைய நிலைமையை கருத்தில்கொண்டு இலங்கையின் ஜனநாயகம்,ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரம் போன்றவற்றை மீட்டெடுக்க இந்தியா கொழும்பிற்கு துருப்புக்களை அனுப்புவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜபக்சே உட்பட அவரது குடும்பத்தினர் இந்தியாவுக்கு தப்பிசென்றுவிட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்திவெளியிட்டன. சமூக வலைத்தளங்களிலும் இத செய்தி தீயாய் பரவியது. மஹிந்தா ராஜபக்சே பதவி விலகியதில் இருந்து அவர் மற்றும் அவரது உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை.
கைதுநடவடிக்கைக்கு பயந்து தப்பியோடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நியச்செலாவணி கையிருப்பு பற்றாக்குறை மற்றும் நிதிநெருக்கடி பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்சவே காரணம் என மக்கள் வெகுண்டெழுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்கள் தீக்கிரையாக்கபட்டுள்ளன. இதை தொடர்ந்து கடந்த செவ்வாயன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தனது அறிக்கையில் " ஜனநாயக செயல்பாடுகள் மூலம் இலங்கையை எப்போதும் இந்தியா வழிநடத்தும். இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்த ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் யூக அறிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக மறுக்கிறது.
இந்த யூகங்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் இலங்கையின் பொருளாதார மீட்புக்கும் ஜனநாயக ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா எப்போதும் தனது உதவிகளை வழங்கும் எனவும் கூறினார். திரிகோணமலையில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் ராஜபக்சே பதுங்கியிருப்பதாக கூறப்பட்டாலும் அவர் கடல்மார்க்கமாக தப்பியிருக்கலாம் என வதந்திகள் பரவிவருகின்றன.