திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சசிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைவதாக செய்தி வெளியான நிலையில் ஆம் உண்மைதான் என அவர் தெளிவு படுத்தி இருக்கிறார் வருகின்ற 10-ம் தேதி தான் பாஜகவில் இணைய இருப்பதாகவும் மதுரையில் இந்த இணைப்பு நடைபெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் திமுகவில் என்ன நடக்கிறது எனவும் உடைத்து பேசி இருக்கிறார் திருச்சி சூர்யா.., தான் கனிமொழி ஆதரவாளர் என முத்திரை குத்தி என்னை எந்த அங்கீகாரமும் கொடுக்காமல் நிறுத்தி வைத்து இருந்தார்கள், நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த காரணத்தால் என்னை எனது தந்தை ஓரம்கட்டி விட்டார்.
இத்தனைக்கும் அந்த பெண்ணை நான் எனது மத முறைப்படிதான் வாழ்க்கையை தேர்ந்து எடுத்து வருகிறேன் திமுகவினர் சாதி மதம் இல்லை என்று வெளியில் சொல்லுவார்கள் ஆனால் அதன்படி நடந்து கொள்ள மாட்டார்கள், இதுதான் நடக்கிறது, திமுகவில் உதயநிதி அணி, கனிமொழி அணி, சபரீசன் அணி என மூன்று அணிகள் இருக்கிறது.
இதில் தான் கனிமொழி ஆதரவாளர் என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தார்கள்,இனியும் இங்கு இருந்தால் உழைப்பிற்கு அங்கீகாரம் இருக்காது என அறிந்து திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய முடிவு எடுத்து இருக்கிறேன், பாஜக தமிழகத்தில் மாற்று சக்தியாக வளர்வது கண் கூடாக தெரிகிறது.
என்னுடைய அரசியல் பயணத்தை நான் தேர்வு செய்துள்ளேன் அதில் தீவிரமாக களப்பணி செய்ய போகிறேன், என குறிப்பிட்டுள்ளார், திருச்சி சூர்யாவை தொடர்ந்து விரைவில் திமுகவில் அதிருப்தியில் உள்ள பல்வேறு முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணையலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ச்சியாக கனிமொழி தரப்பை உதயநிதி தரப்பு ஓரம்கட்டி வருவதே திமுகவில் இருந்து பல தலைவர்கள் வெளியே செல்ல காரணமாக அமைந்துள்ளதாம்.