தமிழக முதல்வரின் துபாய் பயணித்தின் போது அவர் அணிந்து இருந்த கோட் 17 கோடி என போலியாக தகவலை பரப்பியதாக பாஜகவை சேர்ந்த சேலம் மாவட்ட ஐ.டி விங் நிர்வாகி அருள் பிரசாத் என்பவரை கைது செய்தது தமிழக காவல்துறை, இந்த சூழலில் அதே போன்ற தவறை செய்த விசிகவை சேர்ந்த துணை நடிகை ஷர்மிளாவை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விசிக வை சேர்ந்த துணை நடிகை ஷர்மிளா என்பவர் கடந்த அக்டோபர் மாதம் ஒரு போலி செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பரப்பினார் உலகிலேயே உடை மற்றும் அலங்காரத்திற்கு அதிக செலவு செய்யும் உலக தலைவர்களில் மோடி முதலிடம் என்ற செய்தியை பகிர்ந்தார்.
அப்படி எந்த நிறுவனமும் கருத்து கணிப்பை நடத்தவில்லை எனவும் அவர் கூறிய தகவல் போலியானது என நிரூபணமானது இந்த சூழலில் பொய் செய்தியாக இருந்தாலும் எனது பதிவை நீக்க போவது இல்லை என துணை நடிகை தெரிவித்தார். அதாவது என்னை யாரும் எதுவும் செய்யமுடியாது என்ற தோரணையில் போலி செய்தியை வெளியிட்ட துணை நடிகை கூறினார்.
இந்த சூழலில் பாஜக நிர்வாகி என்ன தவறு செய்தாரோ அதே தவறைதான் விசிகவை சேர்ந்த துணை நடிகை செய்துள்ளார், மேலும் பிரதமரை ஒருமையில் பேசியும் பதிவிட்டுள்ளார், தற்போது இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிறு வயது பாஜக நிர்வாகியை ஒரே நாளில் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை ஏன் போலி செய்தியை பரப்பிய துணை நடிகையை கைது செய்யவில்லை எனவும் பாஜகவினர் என்றால் ஒரு நடவடிக்கையும் அதுவே திமுக கூட்டணி கட்சியினர் என்றால் காவல்துறை வேறு வகையில் நடவடிக்கை எடுக்க மறுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உடனடியாக துணை நடிகையை கைது செய்து பிரதமர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்த காரணத்திற்காக அவரை சிறையில் அடைக்கவேண்டும் எனவும் அப்போதுதான் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை உண்டாகும் எனவும் சமூக வலைத்தளங்களில் குரல்கள் எழுந்துள்ளன.