24 special

நேரடி கேள்வி எழுப்பிய "பத்திரிகையாளர்" திடீர் பல்டியடித்த ஆர்.எஸ்.பாரதி..!


தமிழக முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் அந்நிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்த செய்திகளை காட்டிலும் அவரது வெளிநாட்டு பயணம் கடும் சர்ச்சையை மட்டுமே உண்டாக்கி இருக்கிறது, குடும்பத்துடன் வெளிநாடு சென்றது ஏன்? 5000 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வெளிநாடு சென்றதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி வருகிறது என அண்ணாமலை பேசியிருந்தார்.




இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் அதோடு நாங்கள் இன்னும் ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை ஆரம்பித்தால் அண்ணாமலை தாங்கமாட்டார் எனவும் எச்சரிக்கை விடுத்தார் ஆர்.எஸ். பாரதி.



ஒரு கட்டத்தில் அண்ணாமலை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை மிரட்டி பணம் பறித்த ஆதாரம் எங்களிடம் இருக்கிறது, ரெடியாக இருங்கள் சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்தார் ஆர். எஸ் பாரதி இந்த செய்தி அரசியலில் பரபரப்பை உண்டாக்கிய சூழலில், அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் முதலில் எனக்கு முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக ஆர். எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பியதே தவறு அதற்கே சட்டத்தில் இடம் இல்லை.


முதல்வர் வேண்டும் என்றால் எனக்கு நோட்டீஸ் அனுப்பலாம் அது கூட தெரியாமல் இவர்கள் என்னிடம் 100 கோடி கேட்கின்றனர், இதில் சட்ட நடவடிக்கை எடுத்தால் தாங்க மாட்டார்களாம் அடிப்படை சட்டம் கூட தெரியவில்லை என பதிலடி கொடுத்தார் அண்ணாமலை, இது ஒருபுறம் என்றால் நான் அதிமுக அமைச்சர்களை மிரட்டி பணம் பறித்த ஆதாரம் இருப்பதாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.



"சரி இன்னும் 6 மணி நேரம் நான் பாஜக அலுவலகத்தில்தான் இருப்பேன் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதல்லவா அப்போது என்னை கைது செய்யுங்கள், அப்படி செய்யவில்லை என்றால் மக்கள் நீங்கள் சொல்வதை உண்மை என்று நம்ப மாட்டார்கள் என ஒரே போடாக போட்டார். இந்த சூழலில் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பு தமிழகத்தில் மிக பெரிய தாக்கத்தை உண்டாக்கியது."

இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் ஆர்.எஸ்.பாரதி அப்போது பேசியவர் ஒருவர் மீது புகார் வந்த உடனே ஒருவரை கைது செய்யவேண்டிய அவசியம் இல்லை என மழுப்பலான பதிலை கொடுத்தார், அப்போது பத்திரிகையாளர் ஒருவர் விடாமல் ஏன் சார் அண்ணாமலை தவறாக பேசினால் அவர் மீது நடவடிக்கை எடுத்தால்தானே நாளை மற்றவர்கள் பேச மாட்டார்கள் என விடா பிடியாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஏன் சார் கைது செய்து அரசாங்க செலவில் வீணாக சோறு போடணும் என   உலகம் வியக்கும் பதிலை கொடுத்தார். அதாவது இரண்டு நாட்களுக்கு முன்னர் எந்த ஆர். எஸ் பாரதி அண்ணாமலைக்கு நேரம் சரியில்லை என மிரட்டல் விடுத்தாரோ இன்று அப்படியே பல்டி அடித்து பேசினார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகின்றன.



மொத்தத்தில் அண்ணாமலை "ஆட்டத்தை"  சமாளிக்க முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது திமுக என்பதே ஆர்.எஸ். பாரதியின் பேச்சில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.