24 special

இதெல்லாம் ஒரு பொழப்பா..!? கோதுமையை திருடும் பாகிஸ்தான்..!

pakistan, wheat
pakistan, wheat

புதுதில்லி : இந்தியாவிலிருந்து மனிதாபிமான அடிப்படை உதவிகளாக மருந்துகள் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதை இடைமறித்து பாகிஸ்தான் கோதுமைகளை திருடி பதுக்கிவைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த மே 31 அன்று ஆப்கனிஸ்தான் ஹெல்மெண்ட் மாகாணத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வேகமாக சென்ற 50க்கும் மேற்பட்ட ட்ரக்குகளை தலிபான் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ட்ரக்குகளை சோதனையிட்டதில் கோதுமை மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் அவை கள்ளத்தனமாக பாகிஸ்தானுக்கு செல்வதும் கண்டறியப்பட்டது. இதனிடையே ஹெல்மெண்ட் மாகாண கலாச்சார மற்றும் தகவல்கள் இயக்குனரான ஹாபிஸ் ரஷீத் ஹெல்மண்டி கூறுகையில் கடந்த மே 30 அன்று கந்தஹார் ஹெராத் நெடுஞ்சாலையில் கோதுமை ஏற்றப்பட்ட ட்ரக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹெல்மெண்ட் மாகாணத்தில் உள்ள வாஷிர் மாவட்டத்தில் அமைந்துள்ள நிறுவன பகுதிகளில் இருந்து அந்த வாகனத்தில் திருட்டுத்தனமாக கோதுமை ஏற்றப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.


இந்தியா ஆப்கனிஸ்தானுக்கு நல்லெண்ண மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கிவருகிறது. மேலும் இதை பார்வையிட கடந்த வாரம் காபூலுக்கு ஒரு குழுவை மத்திய அரசு அனுப்பியிருந்தது. தாலிபான்கள் ஆப்கனிஸ்தானை கைப்பற்றிய பிறகு இந்தியாவின் முதல் விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பும் கோதுமைகள் பாகிஸ்தானால் திருடப்படுவதை அறிந்த இந்திய அரசு கவலைகொண்டது. அதனால் உடனடியாக மேலும் உணவுப்பொருட்களை வழங்க இந்திய அரசு முடிவெடுத்தது. அதற்காக தலிபான் அரசின் ஒத்துழைப்பை கோரியது. அதை தொடர்ந்து மேற்குப்பகுதியில் அமைந்துள்ள கடற்பரப்பில் வழியாக அனுப்பலாம் என இந்தியா பரிந்துரைத்துள்ளது.

மும்பை, காண்டலா, முந்த்ரா ஆகிய துறைமுகங்கள் வழியாக இனி கோதுமைகள் அனுப்பப்படும் என்றும் அவை ஈரானிய நிலப்பாதையான ஹெராட்டை பத்திரமாக அடையும் என்றும் இந்தியா கூறியதை தலிபான் அரசு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா 50000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தது.

இதுவரை 15000 டன் கோதுமைகள் பஞ்சாப் எல்லை வழியே அனுப்பட்டுள்ளது. ஆப்கானுக்கு அனுப்பும் உதவிகளை பாகிஸ்தான் வழியே கொண்டு செல்ல பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்டிருந்தது. ஆனால் கோதுமைகளை பாகிஸ்தான் திருடுவதாக தெரியவந்ததையடுத்து கடல்வழிப்பயணத்திற்கு இந்திய மற்றும் ஆப்கானுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.