
தற்போது உலகத்தின் பார்வை இந்தியாவின் மீது உள்ளது, பாகிஸ்தான் அடித்து துவைத்த பிறகு உலக வல்லரசு முதல் அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் தாக்குதல் குறித்து தான் விவாதித்து வருகின்றன சீனா மற்றும் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு விமானங்களையும் பாதுகாப்பு அரண்களையும் தாண்டி இந்தியா தாக்கியது எப்படி என விவாதித்து வருகிறார்கள் மேலும் ரஷ்யாவின் எஸ் 400 உக்ரைன் போரில் சரியாக வேலை செய்யவில்லை எஸ் 400 ஐ தாண்டி ரஷ்யாவிற்குள் ஏவுகணைகள் வந்ததாக கூறப்பட்டது
ஆனால் இந்தியாவில் எஸ் 400 மிகவும் துல்லியமாக வேலை செய்துள்ளது. இது குறித்து ரஷியா அதிகாரிகள் இந்தியாவிடம் ஆலோசித்துள்ளார்கள் மேலும் ரஸ்யாவிடம் வண்டகிய எஸ் 400 பாதுகாப்பு அரணை இ இந்தியாவின் டி ஆர் டி ஓ அமைப்பு மேலும் மேம்படுத்தி உள்ளது அதன் வெளிப்பாடு தான் பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன்களை தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது மற்றொரு செய்தி ஒன்று வெளியாகி உள்ளது மிக அமெரிக்க சீனா நாடுகளுக்கு பதட்டத்தை கிளப்பி உள்ளது
நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான "கோல்டன் டோம்" என்ற திட்டத்தை நேற்று அறிவித்தார்.இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்கா, ஆயுதங்களை விண்வெளியில் வைக்கும் என்றும், 2029 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது பதவிக்காலம் முடியும்போது அவை முழுமையாக செயல்படும் என்றும் கூறினார்.
டிரம்ப் சொல்லி முடிவதற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் சுகோய் விமானங்களை இயக்கி இந்திய ரஷ்ய கூட்டணி சாதித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சுகோய் விமானங்கள் இயக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.இந்தியாவிடம் சுமார் 270க்கும் அதிகமான சுகோய் ரக விமானங்கள் இருக்கின்றன. இந்த விமானங்கள் இந்திய விமானப்படைக்கு முதுகெலும்பாக இருக்கின்றன.சுகோய் வகையில் Su-57Mஎனும் போர் விமானத்தை முதல் முறையாக ரஷ்யா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பறக்க வைத்திருக்கிறது. Su-57M என்பது ரஷ்யாவின் Su-57 போர் விமானத்தின் மேம்பட்ட வகையாகும். மேலும் இந்த விமானங்களை ரஃபேல் க்கு சரிசமமாக மாற்றவும் நடவடிக்கையை எடுத்துள்ளது ரஷ்யா. எந்த வித பாதுகாப்பு அரண்களையும் தாண்டி தாக்கும் வண்ணம் உருவாக்கப்படுகிறது.
மேலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் போர் களத்தில் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். ரஷ்யாவின் இந்த சாதனையை அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் உன்னிப்பாக கவனித்துள்ளன.
இந்த சாதனை அமெரிக்காவை விட சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும்தான் கிலியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த வகை விமானங்கள் இந்தியாவிடம் அதிகம் இருக்கின்றன. சுகோய் என்பது ஒரு ரகம். அதில் எந்த அப்டேட் வந்தாலும், அந்த ரக விமானங்களை அதற்கேற்றார் போல மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்தியாவிடம் சுகோய்-30MKI எனும் விமானம் 270 இருக்கிறது. இது முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டால் எப்படி இருக்கும்?
இந்தியாவுக்கு ரஷ்யா நம்பகமான ஆயுத பார்ட்னர். 1996 ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து நாம் ஜெட் விமானங்களை வாங்க தொடங்கினோம். காலப்போக்கில் முழு விமானமும் ரஷ்யாவிலிருந்து வருவதற்கு பதில் அதன் தயாரிப்பு பேட்டனை நாம் வாங்கி, உள்ளூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் உதிரி பாகங்கள் உருவாக்கப்பட்டு அது இங்கேயே அசெம்பிள் செய்யப்பட்டன. இப்படி செய்வதன் மூலம் இந்தியாவின் கால சூழலுக்கு ஏற்ப, நம்முடைய நாட்டுக்கென தனித்தன்மையுடன் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டன.
இதில் இப்போது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தையும் சேர்த்தால், அது மிக வலிமைமிக்கதாக உருவாகும். இப்படியான விமானங்கள் பாகிஸ்தானுக்கு நேரடி அச்சுறுத்தலாகும். இப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்திருக்கும் சூழலில் இப்படியான அப்டேட் வந்திருப்பது நிச்சயம் பாகிஸ்தானுக்கு நல்ல செய்தி இல்லை. அதே நேரம், சீனாவுக்கும் இது சவாலான விஷயம்தான். ஏனெனில், சுகோய்-57M விமானம் அமெரிக்காவின் தலைசிறந்த போர் விமானங்களான F-22 மற்றும் F-35 விமானங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.