24 special

JP. நட்டா அதிரடி தமிழில் வெளியிட்டார் அண்ணாமலை. !

annamalai and jp
annamalai and jp

பாஜக தேசிய தலைவர் நட்டா நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இதில் இளையராஜா விவகாரம் தொடங்கி, மேற்கு வங்கம், காங்கிரஸ் என அனைத்து இடங்களில் என்ன நடக்கிறது என குறிப்பிட்டுள்ளார் தற்போது இந்த தகவல்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளன.


அவை பின்வருமாறு :-எனது சக இந்தியர்களே, நமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள தறுவாயில், நாட்டின் வளர்ச்சிப் பாதை ஒரு முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 2047ஆம் ஆண்டு நாம் 100வது சுதந்திர தினம் கொண்டாடும் பொழுது இந்த நாடு எப்படிப் பட்ட வளர்ச்சியை எட்டியிருக்க வேண்டும் என்று நாம் முன்னோக்கிச் சிந்தித்துத் திட்டமிட வேண்டும்.

இன்று உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. 135 கோடி மக்கள் வாழும் நாடு கொரோனா பெருந்தொற்றின் போது மிகவும் பாதிக்கப்படும் என நம்பியதற்கு

மாறாக அதை  கட்டுப்படுத்தி இவ்வுலகிற்கே மருந்தகமாக மாறியது. நம் நாட்டின் பொருளாதாரம் வெளிப்படைத் தன்மை வாய்ந்தது. சமீபத்தில் நடந்த சீர்திருத்தங்கள் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்துள்ளது அதே சமயத்தில், நாட்டின் வறுமை நிலையும் அதிவேகமாகக் குறையத் துவங்கியதை நம்மால் காண முடிகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அரசியல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. வாக்கு வங்கி அரசியல், பிரிவினைவாத  அரசியல் என்ற பழைய துருப்பிடித்த அரசியல் உத்திகள் இனி வேலைக்காவாது. பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு அனைவரும் ஒன்றிணைத்து, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் உழைப்பு" என்கிற கோட்பாட்டின்மூலம் இந்திய மக்களை உத்வேகப்படுத்தி அவர்கள் சிறகடித்துப் பறக்க ஒரு புதிய பாதையை வழங்கியுள்ளார்.

துரதிருஷ்டவசமாக, மக்களின் தொடர் நிராகரிப்பால் மனமுடைந்த எதிர்க் கட்சிகள் இந்த வளர்ச்சி அரசியலை எதிர்த்து, மீண்டும் வாக்கு வங்கி மற்றும் பிரிவினைவாத அரசியலில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இன்றைக்கு, இந்தியா இரண்டு தனித்துவமான அரசியலைப் பார்த்துக்கொண்டிருக்கிறது; தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்கள் பணியில் ஒருவிதமும் எதிர் அணியில் பல கட்சிகளின் அற்ப அரசியிலும் அவர்கள் உமிக்கும் கடும் வார்த்தைகளிலும் மறுவிதத்தை காணலாம்.

கடந்த சில தினங்களாக இந்த கட்சிகள் எல்லாம் எழுத்து வடிவில் ஒன்று சேர்ந்து (நிஜத்தில் ஒன்று சேர்வார்களா என்பதைக் காலம் தான் முடிவு செய்யும்), நம் தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக நேரடி தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அது மட்டுமின்றி கடினமாக உழைக்கும் நம் குடிமக்கள் மீது அவதூறு விளைக்கிறார்கள்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட மனமுடைந்த கட்சிகளுக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன் வாக்கு வங்கி அரசியலை முன்னெடுக்கும் நீங்கள், ராஜஸ்தானில் உள்ள கரோலில் நிகழ்ந்த இழிவான நிகழ்வுகளை மறந்துவிட்டீர்களா? எந்த நிர்ப்பந்தத்தால் இப்படி அமைதியாக உள்ளீர்கள்?

நவம்பர் 1966 ல் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, இந்தியாவில் பசுவதை தடை சட்டம் கோரி நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் செய்த இந்து சாதுக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ராஜீவ்காந்தியின் இந்த பிரபலமான வார்த்தைகளை யாரால் மறக்க முடியும் ஒரு பெரிய மரம் விழும்போது பூமி அதிரும்" இந்திரா காந்தியின் இறப்பிற்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்துகிறது.

இந்த வார்த்தைகள் 1969 குஜராத், 1980 மொராதாபாத், 1984 பிவண்டி, 1987 மீருட், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1980 லிருந்து இந்துக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்கள், 1989 இல் பாகல்பூர், 1994 இல் ஹூப்ளி.. காங்கிரஸ் ஆட்சியின் போது நிகழ்ந்த மதக்கலவரங்களின் பட்டியல் மிக நீண்டது. 2013 இல்நடந்த முசாபர்நகர் கலவரம் அல்லது 2012 இல் அசாமில் நிகழ்ந்த கலவரம் எல்லாம் யார் ஆட்சியில் நிகழ்ந்தது?

அனைவருக்கும் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியைக் கட்டுப்படுத்திய தேசிய ஆலோசனைக் குழு மிகவும் மோசமான வகுப்புவாதவன்முறை சட்ட மசோதாவை நிறைவேற்றியது. வாக்கு வங்கி அரசியலின் அடிமட்டத்தைத் தொட்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணி.

அதேபோல, மிகவும் கொடூரமான முறையில் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் இனப்படுகொலைகள் செய்யப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில் தான் அம்பேத்கரைப் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி பெற வைத்ததும் இதே காங்கிரஸ் கட்சி தான்.

தமிழ்நாட்டில், ஆளுகின்ற கட்சியுடன் இணக்கமான சிலர் இந்தியாவின் தலைசிறந்த இசை அமைப்பாளரை அவர்களுக்கு சாதகமான கருத்தைத் தெரிவிக்காததால் வார்த்தைகளால் தாக்கி, துன்புறுத்தி அவமானப்படுத்துகிறார்கள். இது தான் ஜனநாயகமா? அவரது கருத்தை ஒரு கருத்தாக எடுத்துக் கொண்டு கடந்து செல்லாமல் கடும் சொற்களால் ஏன் துன்புறுத்த வேண்டும்? மிகவும் கேவலமான அரசியல் வன்முறை மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் நிகழ்ந்து

வருகிறது, தொடர்ச்சியாக பாஜக நிர்வாகிகள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். மற்ற கட்சிகள் ஜனநாயகத்தை எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று.மகாராஷ்டிராவில் இரண்டு மந்திரிகள் ஊழல், பணம் பறித்தல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுதல் என்ற குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நாட்டின் பொருளாதார தலைநகரமாக விளங்கும் மாநிலத்தின் இரண்டு மந்திரிகள் மிரட்டி பணம் பறிக்கும் குற்றத்தில் தொடர்புடையவர்கள் என்பது நாட்டிற்கு எப்பேர்ப்பட்ட தலைகுனிவு, மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள், இந்த அரசியல் கட்சிகளின் வெட்கக்கேடான நடத்தையின் சான்று இவர்களில் வாக்கு வங்கி சாயம் வெளுக்க துவங்கியதால் பயத்தில் உள்ளார்கள்.

பல ஆண்டுகளாக, அவர்கள் வளர்த்த தேச விரோத அமைப்புகள், மக்களை கொடுமைப்படுத்திய அமைப்புகள், இன்று சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கட்சிகள் பயத்தில் மூழ்கியிருப்பதால் இப்படி மக்கள் விரோதமாகச் செயல்படத் துவங்கியுள்ளார்கள்.