டிஜிட்டல் ஊடகங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு ட்விட்டர் இணங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் திங்களன்று தெரிவித்துள்ளது.அமித் ஆச்சார்யா என்ற வழக்கறிஞரின் மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி ரேகா பல்லி மத்திய அரசுமற்றும் சமூக ஊடக தளமான ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசியது.அது விதிகளுக்கு இணங்குவதாகவும், குடியுரிமை குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்ததாகவும் தெரிவித்தது.மத்திய அரசு இதனை ஆதாரத்துடன் மறுத்தது.
ட்விட்டர் தளம் முடக்கப்படாவிட்டால் அது சட்டவிதிகளை பின்பற்றியாக வேண்டும் என கண்டிப்புடன் கோர்ட் அறிவித்தது.வக்கீல் ஆகாஷ் வாஜ்பாய் மற்றும் மனிஷ்குமார் மூலம் தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவில், திரு. ஆச்சார்யா, "நம் தேசத்திற்க்கு எதிரான இரண்டு ட்வீட்டுகளுக்கு எதிராக புகார் அளிக்க முயன்றபோது ட்விட்டர் நிறுவனம் புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்தது"என குறிப்பிட்டிருந்தார்விசாரணையின் போது, ட்விட்டர் விதிகளை பின்பற்றவில்லை என்று மத்திய அரசின் நிலையான ஆலோசகர் ரிபுதாமன் சிங் பரத்வாஜ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
திரு. ஆச்சார்யா, தனது மனுவில் பிப்ரவரி 25 முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்ததாகவும், ட்விட்டர் உள்ளிட்ட ஒவ்வொரு சமூக ஊடக இடைத்தரகர்களுக்கும் இணங்குமாறு மையம் மூன்று மாதங்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.மேலும் மே 25 அன்று மூன்று மாத காலம் முடிந்துவிட்டதாக அவர் வாதிட்டார், ஆனால் ட்விட்டர் அதன் ம ட்வீட் தொடர்பான புகார்களைக் கையாள எந்தவொரு குடியுரிமை குறைதீர்க்கும் அதிகாரியையும் நியமிக்கவில்லை.
மேலும் தாமதமின்றி ஒரு குடியுரிமை குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்குமாறு மனுவில் ட்விட்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய மத்திய அரசு தனி குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ட்விட்டர் சமீபத்தில் இந்தியாவின் புதிய டஜிட்டல் மீடியா கொள்கைகளை விமர்சித்தது. "ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது* என்கிற ரீதியில் ஒரு தனியார் நிறுவனம் ஒரு நாட்டையே விமர்சித்ததால் பல தேச அபிமானிகள் கொந்தளித்தனர்.மேலும் ட்விட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜாக் இடதுசாரி கொள்கை உடையவர்.அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.
நீதிமன்றத்தில் ட்விட்டரின் கருத்துக்களுக்கு பதிலளித்த மத்திய அரசு, ட்விட்டர் சமூக ஊடக தளம் இந்தியாவை இழிவுபடுத்துவதற்கான ஆதாரமற்ற மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கான விதிமுறைகளை ஆணையிடுவதாகவும் கூறியது.மேலும் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்க ட்விட்டர் மறுத்துவிட்டதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம் "புதிய டிஜிட்டல் விதிகளின் கீழ், சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் ஆகியவை கொடியிடப்பட்ட செய்தியின் தோற்றத்தை 36 மணி நேரத்திற்குள் அடையாளம் காணும்படி கேட்டுக் கொள்ளப்படுவதோடு, ஒரு முதன்மை இணக்க அதிகாரி, நோடல் தொடர்பு நபரை நியமிக்கவேண்டும்" என தீர்ப்பளித்தது.
இன்னும் 36 மணிநேரத்தில் ட்விட்டர் நிறுவனம் விதிகளை பின்பற்றவில்லை எனில் இந்தியாவில் தடைசெய்யப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.மற்ற சமூக ஊடகங்கள் பேஸ்புக் வாட்சப் மற்றும் டெலிகிராம் ஆகியவை விதிகளை பின்பற்றுவோம் என உறுதியளித்திருக்கும் இந்நிலையில் ட்விட்டர் மட்டுமே அடங்காத மம்தா போல் ஆடி வருகிறது.அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கையே முடக்கி தனது இடதுசாரி மனப்போக்கை காண்பித்தது.பொதுவாகவே ஏராளமான புகார்கள் ட்விட்டர் மேல் உண்டு.இடதுசாரி கருத்துக்கள் தேசத்துக்கும் சமூகத்திற்கும் எதிராக இருந்தாலும் அதனை நீக்குவதில்லை.ஆனால் தேசிய சிந்தனை உள்ளவர்கள் கருத்துகளை உடனடியாக நீக்குகிறது.
இதனால்
தான் சீனா ரஷ்யா போன்ற
நாடுகள் ட்விட்டரை தூரமாகவே வைத்திருக்கின்றனர்.
...உங்கள்
பீமா