World

சாக்லேட் கொடுத்து பெண் குழந்தைகளுக்கு தொல்லை கொடுத்த மர்ம நபர்...!

school students, auto driver
school students, auto driver

நாடு தற்போது பெரும்பாலான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பல துறைகளிலும் அதிக வளர்ச்சியை கண்டு வருகிறது இருப்பினும் நாட்டின் சில பகுதிகளில் ஆங்காங்கே மகளிர் குறித்த சில அசம்பாவித செய்திகள் வெளி வந்து கொண்டே உள்ளது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதும் பெண்கள் தவிர்த்து பெண் குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் பெற்றோர்கள் பலர் தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதற்கு கூட மிகவும் பயத்தை அனுபவிக்கின்றனர். முன்பெல்லாம் குழந்தைகளை கடத்திக் கொண்டு சென்று கண் கை, காது கிட்னி போன்றவற்றை திருடி விடுவார்கள் என்பதை கூறி யார் கூப்பிட்டாலும் போகக்கூடாது தெரியாதவர்கள் எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிட கூடாது என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கூறும் முக்கிய தாரக மந்திரமாக இருக்கும். ஆனால் தற்பொழுது அந்த மந்திரத்தின் உடனே தெரியாதவர்களை உடம்பின் அந்தரங்கப் பகுதிகளில் கை வைக்க விடக்கூடாது கை வைத்தால்  பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.


ஏனென்றால் அப்படிப்பட்ட மோசமான காலமாக மாறி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் இதுபோன்ற ஒரு பாலியல் தொந்தரவை செய்து வந்த ஒருவரை மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த பள்ளியில் பயின்று வரும் ஏழு முதல் 10 வயதிற்குட்பட்ட மாணவிகளை மர்ம நபர் ஒருவர் சாக்லேட் கொடுத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த மாணவிகளை அடுக்குமாடி குடியிருப்பில் மாடிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திடம் புகார் அளித்ததை அடுத்து அந்த மர்ம நபரை மூன்று தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதில் மாணவிகளை துன்புறுத்தி வந்தவர் அடையாறு அருணாச்சலபுரம் வசந்தா பிரஸ் சாலையை சேர்ந்த யோவான் என்பதை போலீசார் கண்டறிந்ததை அடுத்து இது தொடர்பாக மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த நம்பரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாக்லேட் கொடுத்து ஏழை குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்த தகவல்கள் செய்தித்தாள்களில் வெளியானதை அடுத்து அதனையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது, மேலும் இது போன்ற பல இடங்களில் பல தொல்லைகள் நடைபெறுவதாகவும் இதற்கு பலர் பதிவிட்டுள்ளனர் மேலும் பொண்ணு 6த் படிக்குறா. வழக்கமா private cab ல தான் ஸ்கூலுக்கு போறா. சமீபத்துல அந்த டிரைவர் pedophile நாயி அவளை ஸ்கூல்ல இறக்கி விட்டுட்டு, எல்லாரையும் அனுப்பி விட்டுட்டு, இவ bag மட்டும் மாட்டிகிச்சு எடுத்துதர்றேன்னு இருக்க வெச்சுட்டு, எல்லாரும் போனதுக்கு அப்புறம் அவகிட்ட தப்பா touch பண்ணியிருக்கான். இவ அவன்கிட்ட கத்திவிட்டுட்டு bag வாங்கிட்டு அழுதுட்டே school உள்ள வந்திருக்கா. இவளை பாத்த PT miss, ஏன்னு கேக்க, பின்னாடியே வந்த அந்த நாயி ' அவ தம்பி விட்டுட்டு வந்துட்டான்னு அழுகுறா மேடம்'னு அவசரஅவசரமாக பதில் சொல்லிருக்கான். இவ அவனை மொறச்சி பாத்துட்டு Class போயிட்டா. அந்த PT மேம் இவ class ல இருந்து கூப்ட்டு மறுபடி என்னாச்சுனு கேக்க, இவ முழுசா எல்லாத்தையும் சொல்லி அழுதுருக்கா.  ஓடனே HM கிட்ட சொல்லி, school ல இருந்தே police ல புகார் குடித்துட்டாங்க. Police தான் அண்ணனுக்கே phone பண்ணி தகவல் சொல்லியிருக்காங்க என்று மற்றுமொருவர் கமெண்ட் செய்ததும் இணையத்தில் வைரலாகி உள்ளது.