24 special

ஒரே ஒரு பாயிண்ட் போதும் அமலாக்கத்துறைக்கு..? திமுக லீகல் டீம் அதிர்ச்சி..!

Senthil balaji,enforcement
Senthil balaji,enforcement

திமுக லீகல் டீமையே திணறடித்த அமலாக்கத்துறை, அசைய முடியாத அளவிற்கு செந்தில் பாலாஜிக்கு வேலிபோட்ட அமலாக்க துறை அதிகாரிகள்!அமலாக்கத் துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பொழுது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக திடீரென புரண்டு விழுந்து அழுத சம்பவம் தமிழக அரசியலில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விரைந்து அனுமதித்தனர் ஆனால் இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தனது கணவரை காணவில்லை என்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.


அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்தே செந்தில் பாலாஜியை கைது செய்ய முற்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவரது மனைவி ஏன் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்ற கேள்வியும் தற்போது அரசியல் வட்டாரங்களில் சுற்றி வருகிறது. மேலும் இதன் பின்னணியில் என்ன காரணம் என்று ஆராய்ந்த போது செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனுவிற்கு பின்னால் திமுகவின் லீகல் டீம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

அதாவது தனது கணவரை காணவில்லை என்று மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வதன் மூலம் இந்த விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற கால இடைவெளியில் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படலாம் அது நமக்கு கிடைக்கும் சௌகரியமான வாய்ப்பாக இருக்கும் என திமுகவின் லீகல் டீம் ஸ்கெட்ச் போட்டது. ஆனால் அமலாக்கத்துறை திமுகவின் லீகல் டீமையும் தாண்டி தீயாக வேலை செய்து தற்போது கோர்ட்டில் வாதங்களை முன்வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக எட்டு விதமான செக்குகளை வைத்துள்ளது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சை அறையிலேயே மேற்கொள்ளப்பட்ட விசாரணையால் நீதிமன்ற காவலுக்கு கீழ் அவர் கொண்டுவரப்பட்டார். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்பதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற மனு மற்றும் அவரின் ஜாமீன் மனு போன்றவற்றிற்கான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் இவர் கைது செய்யப்பட்டது ஏன் என தெரியவில்லை கைது செய்யப்பட்டாரா என்றே தெரியவில்லை என்று வாதம் முன்வைக்கப்பட்டது இதற்கு அமலாக்க துறை தரப்பினர், அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரை கைது செய்வதற்கான மெமோவை வாங்க மறுத்துள்ளார் மேலும் ரீமாண்டை நீக்கு கூற முடியாது வேண்டுமென்றால் ஜாமின் கோரி முடியும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்ததில் எந்த ஒரு விதிமுறைகளும் நடைபெறவில்லை கைது செய்யப்படுவதற்கான மெமோவை வாங்கினால் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே அவர் அதனை வாங்க மறுத்துள்ளார், அவரை கைது செய்வதற்கான சட்ட விதிமுறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்பட்டது, குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சாத்தியமாகாது, உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்

ஆனால் அதற்கான அவசியம் இல்லை என்றே நாங்கள் கூறுகிறோம், செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கண்காணிக்க மருத்துவ குழுவை அமைக்க வேண்டும் அதுவும் சுதந்திரமான மருத்துவ குழு, அதோடு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் அவரை மாற்றக்கூடாது, நேற்று முதல் நாள் வரை ஆரோக்கியமாக தனது பணிகளை மேற்கொண்ட செந்தில் பாலாஜி எப்படி திடீரென உடல்நிலை மோசமாகும் என்று அமலாக்க துறையினர் 8 அதிரடி கணைகளை எதிர் தரப்பிடம் முன் வைத்தனர். 

இப்படி திமுகவின் லீகல் டீம் போட்ட கணக்குகளை எல்லாம் அடித்து நொறுக்கி தற்போது அமலாக்கத்துறை திறமையாக செந்தில் பாலாஜியின் வழக்கை கையாண்டு வருவதால் திமுக தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறது. அமலாக்கத்துறை கொடுத்த மெமோவை செந்தில்பாலாஜி கையில் வாங்காதது மிகப்பெரிய தப்பு என்றும் இதன் காரணமாகவே செந்தில்பாலாஜி தரப்பு என்ன வாதம் வைத்தாலும் சட்டப்படி செல்லாது அமலாக்கத்துறை அதனை இந்த ஒரு பாய்ண்டை வைத்து உடைந்துவிடும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.