செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மத்திய பாஜக அரசை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் பழைய திமுக வரலாற்றை திருப்பி பாருங்கள் எனவும் இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை என வீர வசனம் பேசினார்.
முதல்வர் வீர வசனம் பேசி கொண்டு இருந்த நேரத்தில் தமிழக ஆளுநர் கொடுத்த ஷாக் உண்மையில் முதல்வர் ஸ்டாலினை ஒரு மணி நேரம் புலம்ப வைத்து இருக்கிறது, செந்தில் பாலாஜியின் இலாகாவை வேறு இரு அமைச்சர்களுக்கு மாற்ற கோரி முதல்வர் கடிதம் எழுதிய நிலையில் அதற்கு நேரடியாக ஆளுநர் அடுத்த ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை எழுதிய பதில் கடிதம் தான் தற்போது முதல்வரை அதிர செய்து இருக்கிறது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தோம். "தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் மாளிகைக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் வந்தது. அதில், 'அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமிருக்கும் துறைகளை அவரால் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே அவரிடமிருக்கும் துறைகளை, இரு வேறு அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்' எனப் பரிந்துரை செய்து அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தைப் படித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு பதில் கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், 'அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தையும், சிகிச்சை தேவை என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கைது நடவடிக்கை குறித்துப் பரிந்துரை கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்தப் பரிந்துரையை என்னால் ஏற்க முடியாது' எனக் கூறி, தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிராகரித்துவிட்டார். மேலும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வது குறித்தும் ஆளுநர் ரவி அந்தக் கடிதத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார்" .
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட நபரை அமைச்சரவையில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? ஏன் எனவும் ஆளுநர் முதல்வரிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட காரணத்தை மறைத்து அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமைச்சரவையில் இலாகாவை மாற்ற இருக்கிறோம் என தெரிவித்தது தற்போது பெரும் சிக்கலை ஆளும் தரப்பிற்கு உண்டாக்கி இருக்கிறது.
எப்படியாவது ஆளுநரை சமாதானம் செய்து விடலாம் என ஆளும் கட்சி முயன்ற நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் அதனால் இலாகாவை மாற்ற இருக்கிறோம் என முதல்வட் கைப்பட கடிதம் எழுதாத வரை என்னால் எதுவும் செய்ய முடியாது என அழுத்தம் திருத்தமாக அதிகாலையில் சொல்லி விட்டாராம் ஆளுநர்.
எது எப்படியோ என்னடா மாநிலத்தில் இத்தனை களோபரம் நடக்கிறது ஆளுநர் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லையே என பலரும் எதிர் பார்த்து காத்து இருந்த நிலையில் ஆளுநர் அவரது அதிரடியை நேற்றில் இருந்து தொடங்கி இருக்கிறார். முதல்வர் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்து வெளியிட்ட வீடியோ அனைத்தும் ஒரே நாளில் ஆளுநர் நடவடிக்கையால் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.