24 special

அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஜோதிமணி... வெளியானது வீடியோ..!

Stalin, Jothimani
Stalin, Jothimani

தமிழகத்தில் மக்களவை தேர்தலை பொறுத்தவரைக்கும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணிகள் களம் இறங்குகின்றனர். இதில் திமுக கூட்டணியில் கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின் போது தொடங்கிய அதே கூட்டணி மீண்டும் கட்டமைத்து தேர்தலை சந்திக்கிறது. அந்த வகையில் தொகுதி பங்கீடு காங்கிரஸுக்கு இழுபறியாக நடந்து வந்த நிலையில் ஒரு வழியாக முடிவுக்கு வந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 


காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு வந்தது, திமுக அதற்கு மறுப்பு தெரிவிக்க கடைசி நேரத்தில் ஒன்பது + ஒன்று என்று பத்து தொகுதியை ஒதுக்கியது. இதில் மீண்டும் பழைய எம்பிகளுக்கு சீட் கொடுப்பதாக தகவல் வந்ததால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக சிவகங்கை தொகுதியை சேர்ந்த கார்த்திக் சிதம்பரம் மற்றும் கரூர் தொகுதியை சேர்ந்த ஜோதிமணி ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். 

இதனால், காங்கிரஸ் நிச்சயம் அவர்களுக்கு சீட் கொடுக்காமல் புதிய முகங்களுக்கு மற்றும் புதிய தொகுதிகளை கேட்பதாக தகவல் வந்தது. அப்படியிருக்கையில் மாநில தலைவராக செல்வ பெருந்தகை பொறுப்பேற்றார். அவரும் ஜோதிமணிக்கு சீட் கொடுப்பதற்கு தயங்கினார் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஜோதிமணி வெற்றி பெற்ற பிறகு தனது தொகுதி பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை என்று பொதுமக்கள் விரட்டி அடித்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் திமுகவும் ஜோதிமணிக்கு சீட் கொடுக்காமல் கரூரில் திமுக வேட்பாளர் அதுவும் செந்தில்பாலாஜி கை காட்ட கூடிய வேட்பாளர்களை நிறுத்துவோம் என்ற நிலைக்கு சென்றனர்.

இப்படி திமுக முடிவெடுக்க உடனே டெல்லி புறப்பட்ட ஜோதிமணி அங்கையே கேம்ப் போட்டு காங்கிரஸ் தலைமையிடம் கேட்டு கரூரை மீண்டும் தன் வசம் ஆக்கினார் ஜோதிமணி. இந்நிலையில், கூட்டணி கட்சிக்கு பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் திமுங்க அமைச்சர்கள் கரூரில் நேற்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் செய்து வந்தார் ஜோதிமணிக்கு ஆதரவாக, அப்போது உடன் அமைச்சர் சக்கரபாணி இருந்தார் ஜோதிமணியும் அந்த வாகனத்தில் இருந்தார்.

அதில், அமைச்சர் அன்பில் மகேஷ் வெற்றி வேட்பாளர் ஜோதிமணி அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும்படியும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் தேர்தலில் காய் சின்னத்தில் வாக்களிப்பீர் என்று கேட்டார். அருகில் இருந்த ஜோதிமணியோ கையில் மொபைல் போனை பயன்படுத்தி வந்தார். மக்களை பார்த்து கையை கூட தூக்கவில்லை. குனிந்த படியே செல்போனை பயன்படுத்தி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் இன்னும் இவங்க மாறவில்லை என்றும் ஒரு படி மேலே சென்று நானெல்லாம் செகண்ட் டைம் சிட்டிங் எம்பின்னு தெரியாம சும்மா வலவல...வலன்னு பேசுறான்யா... இதுக்குத்தான் இவனுங்களை எல்லாம் நான் கூப்பிடறதே இல்ல... என்று ஜோதிமணி மைண்ட் வாய்ஸ் இருப்பதாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவும் இணையத்தில் உலா வருகிறது.