அதிர்ந்து போயிருக்கும் எதிர் தரப்பு சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது, தொடர்ச்சியாக கனல் கண்ணன் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டு வருவதன் பின்னணியில் ஆளும் கட்சியும் அதன் முக்கிய ஆதரவு கட்சியை சேர்ந்த பிரமுகரும் இருப்பதாக கூறப்படுகிறது.
பெரியாா் சிலை கோவில் வாசலில் இருப்பது குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவையொட்டி, சென்னை மதுரவாயலில் கடந்த ஆக. 1-இல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டுப் பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் எதிரேயுள்ள பெரியாா் சிலையை உடைக்க வேண்டும் கடவுள் இல்லை என்று சொன்னவருக்கு ஏன் கோவில் முன்பு சிலை வைக்கவேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக தந்தை பெரியாா் திராவிடா் கழக நிா்வாகி சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கனல் கண்ணன் மீது சென்னை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் கனல்கண்ணனை ஆகஸ்ட் 15ஆம் தேதி புதுச்சேரியில் தமிழக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனா். கனல் கண்ணன் ஜாமீன் கோரி எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். ஆளும் கட்சி வழக்கறிஞர் மற்றும் காவல்துறை சார்பில் கனல் கண்ணனுக்கு உடனடியாக ஜாமின் கிடைத்தால் இதே போன்று பலரும் கருத்து தெரிவிப்பார்கள் மேலும் நிச்சயம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற வாதத்தை வைத்த காரணத்தால் கனல் கண்ணன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஆளும் கட்சியின் கூட்டணியில் இடம்பெற்ற பெரியாரிய சிந்தனை கொண்ட முக்கிய நபர் கனல் கண்ணன் சிறை வாசத்தை குறைந்தது 15 நாட்களாவது அனுபவிக்க வேண்டும் பெரியாரை இனி யாரும் தவறாக பேசாத வண்ணம் கனல் கண்ணனின் சிறை வாசம் இருக்க வேண்டும் என தீயாக வேலை செய்து வருகிறார்களாம் அதனால்தான் கனல் கண்ணனுக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் உண்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை அவமரியாதை செய்த பள்ளி தலைமை ஆசிரியர் போன்றவர்களை கைது செய்யாத தமிழக அரசு, நடராஜரை மிக இழிவாக பேசியவனை கைது செய்யாத தமிழக அரசு, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மோதலை உண்டாக்கும் வகையில் செயல்படும் பெரியாரிய அமைப்புகளை சேர்ந்தவர்களை கைது செய்யாத தமிழக அரசு கனல் கண்ணனை கைது செய்வதில் தொடங்கி அவருக்கு ஜாமின் கிடைக்க விடாமல் செய்வதில் மட்டும் தீவிரம் காட்டுவது ஏன் என்ற கேள்வி தற்போது சாமானிய மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்த சூழலில் தொடர்ந்து கனல் கண்ணனை சிறையில் இந்து முன்னணி அமைப்பினர் சந்தித்து வருகின்றனர், சந்திப்பவர்களிடம் நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன் நமது இயக்கத்தினர் என்னை நினைத்து வருந்த வேண்டாம் விரைவில் வெளிவருவேன் நாளை நமக்கான ஆட்சி அமையும் பொழுது இதே வேதனை எதிரிகள் உணர்வார்கள் என தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
கனல் கண்ணன் சிறைக்கு சென்றால் மனம் தளருவார் என கணக்கிட்டு இருந்த எதிர் தரப்பினர் அவரது மன உறுதியை பார்த்து அதிர்ந்து போய் இருக்கிறார்களாம்.