24 special

செல்லும் இடமெல்லாம் நிற்காமல் விழுந்தடித்து ஓடும் கனிமொழி...!

udhayanidhi, kanimozhi
udhayanidhi, kanimozhi

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் திராவிடர் கழகம் மற்றும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் சேர்ந்து உதயநிதி பேசிய பேச்சுதான் தற்பொழுது திமுகவிற்கு அரசியல் ரீதியாக பெரிய ஆபத்தை விளைவிக்கப் போகிறது என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உதயநிதி பேசும் பொழுது, 'இந்த மாநாட்டிற்கு சனாதன எதிர்ப்பு என கூறாமல் சனாதன ஒழிப்பு என பெயர் வைத்ததற்கு பாராட்டுக்கள். சனாதனத்தை எதிர்க்கக்கூடாது, ஒழிக்க வேண்டும்.கொசு டெங்கு இதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் சனாதனத்தை ஒழிப்பதே முதல் கடமை, சனாதனம் என்பதே சமஸ்க்ருதத்தில் இருந்து வந்த வார்த்தைதான். சனாதனத்தை ஒழிக்க கம்யூனிச, திராவிட இயக்கங்கள் போராடுகின்றன' என்கிற ரீதியில் பேசினார். 


மேலும் அந்த கூட்டத்தில்  மேலும் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து சனாதன ஆதரவாளர்கள் உதயநிதிக்கு எதிராக பொங்கினார்கள் குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிலிருந்து தேசிய அளவில் அமித் மால்வியா, வானதி சீனிவாசன் என அனைவரும் உதயநிதிக்கு எதிராக தங்களது கருத்தை தெரிவித்தனர். வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில் உதயநிதி தன்னை கிறிஸ்துவர் எனக்கூறும் செய்தியை குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி திமுகவின் அழிவு உதயநிதியால் தான் என வீடியோவை வெளியிட்டார். 

இந்த நிலையில் உதயநிதியின் இந்த பேச்சுக்கு எதிர்வினைகள் அதிகமாக குவிந்து வருகிறது. ஒரு அமைச்சராக எதிர் இருந்து கொண்டு அதுவும் ஒரு மாநிலத்தின் முதல்வரின் மகனாக இருந்து கொண்டு இப்படி ஒரு குறிப்பிட்ட அதுவும் இந்தியாவில் பெரும்பான்மையாக பின்பற்றக்கூடிய சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் எனக் கூறியது நிச்சயம் திமுகவிற்கு பின்னடைவாக அமையும் இதுதான் திமுகவின் அழிவு காலம் ஆரம்பம் என அரசியல் வல்லுனர்களே கூறும் அளவிற்கு இருந்தது உதயநிதியின் பேச்சு. இந்த நிலையில் உதயநிதியின் மீது அதிரடி வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசில் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார்.அதில், சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

சனாதன தர்மத்தை பின்பற்றும் என்னுடைய மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுவிட்டன. மதத்தின் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.இப்படி உதயநிதி யாரோ எழுதிக் கொடுத்ததை பேசுகிறேன் என்ற பெயரில் திமுகவிற்கு பெரிய ஆப்பாக இறக்கி விட்டார் இது கண்டிப்பாக திமுகவின் அரசியல் வரலாற்றில் எழுதப்படும் திமுக அழிவதற்கு இது ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்கும் என சனாதன ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் சமீபத்தில்தான் INDIA கூட்டணி சந்திப்பு, தேசிய அரசியல் ஆசை என முதல்வர் மும்பை வரை சென்று வந்துள்ளார். ஆனால் உதயநிதி அனைத்திலும் மண் அள்ளி போடும் விதமாக சனாதனத்தை அழிக்க வேண்டும் என பேசி வம்பை விலைகொடுத்து வாங்கிவிட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் நேற்று இரவு இதனை சட்டபூர்வமாக சந்திப்பேன் என உதயநிதி தனது சமூக வலைதள பதிவு மூலம் கூறியது குறிப்பிடத்தக்கது.