தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு செய்யவுள்ள நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன, தமிழகத்தில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள் பட்டியல் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளது.
அதில் முதல் இடத்தில் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இருப்பதாகவும் அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது ஒன்று தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்க தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக டெண்டர் விதிமுறைகளில் மாற்றம் செய்யபட்டதாக எழுந்த குற்றசாட்டு.
குற்றச்சாட்டில் உண்மை இருப்பதை அறிந்த முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலாளர் "இறையன்பு" மூலம் டென்டரை ரத்து செய்ததுடன், இனி அனைத்து இனிப்புகளும் அரசு நிறுவனமான ஆவினில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என அறிவித்தார். இது கண்ணப்பன் மீது விழுந்த முதல் அரசியல் பின்னடைவு.
தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது, ராமநாதபுரம் : போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், என்னை ஜாதி பெயரை சொல்லியும், ஒன்றிய தலைவர் பேச்சை தான் கேட்பாயா, உன்னை மாற்ற வேண்டும் என்றும் மிரட்டினார் என ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் பி.டி.ஓ., ராஜேந்திரன் குற்றசாட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 27 காலை என்னையும் மற்றொரு பி.டி.ஓ., அன்பு கண்ணனையும் அமைச்சர் ராஜகண்ணப்பன் வீட்டிற்கு வரச் சொன்னதாக உதவியாளர் சத்தியேந்திரன் போன் செய்து அழைத்தார்.அமைச்சரை சந்திக்க சிவகங்கை வீட்டிற்கு சென்றபோது அவர் என்னை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி, ஒன்றிய தலைவர் சொல்றதை மட்டும் தான் கேட்பாயா, எங்க கட்சிக்காரர் சொல்வதை கேட்க மாட்டாயா.
உன்னை பி.டி.ஓ., சீட்டில் வைக்க மாட்டேன். உடனடியாக உயர் அதிகாரி அமுதா IAS சொல்லி பணிமாறுதல் செய்வேன். பி.டி.ஓ., பதவி வகிப்பதற்கு உனக்கு தகுதி இல்லை என கோபமாக பேசினார்.வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் என்னால் துாங்க முடியவில்லை. நேற்று காலை இதுதொடர்பாக கலெக்டர், கூடுதல் கலெக்டரிடம் தகவல் தெரிவிக்க சென்றேன். சந்திக்க முடியவில்லை. திரும்ப வந்து ஒன்றிய அலுவலகத்தில் வேலை செய்கிறேன்.
இது நான் சந்திக்காத மனக்காயங்களை ஏற்படுத்தி உள்ளது என்று புகார் தெரிவித்துள்ளார், இது அரசு அதிகாரிகள் மத்தியில் சச்சரவை உண்டாக்கியுள்ளது மேலும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் வெளிப்படையாக புகார் தெரிவிக்காமல் மறைமுகமாக "கண்ணப்பன்" குறித்து புகார்களை அனுப்பி வருகின்றனராம். இந்த காரணங்களை முன்வைத்து புதிய அமைச்சரவை மாற்றத்தில் கண்ணப்பனுக்கு இடம் இருக்காது என்கின்றனர், அறிவாலய வட்டாரங்கள் அதே வேலையில் அவர் சார்ந்த சமுதாய வாக்குகள் முக்கியம் என்பதால் செல்வாக்கு இல்லாத வேறு இலாகா மாற்றப்படலாம் எனவும் TNNEWS24 தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது கண்ணப்பன் தலைமையை சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளாராம், துபாயில் இருந்து திரும்பிய முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளாராம் முதல்வரின் சந்திப்பிற்கு பிறகுதான், அடுத்தது என்ன என்ற விடை கிடைக்கும்.