24 special

நீண்டதூரம் பயணிக்கும் UAV..! ஸ்கை ஏர் மொபிலிட்டியின் அடுத்த வரவு..!


புதுதில்லி : இந்தியாவில் நடத்தப்பட்ட ஏர் கார்கோ கண்காட்சியில் பிரபல டிரோன் உற்பத்தி நிறுவனமான ஸ்கை ஏர் மொபிலிட்டி தனது புதிய அறிமுகமாக நீண்டதூர ஆளில்லா வான்வெளி வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இரு நகரங்களுக்கிடையே சரக்குகளை கொண்டுசெல்வதை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ரக ட்ரோன்கள் 100 கிலோமீட்டர் தூரம் பயணிக்கவல்லது.


பொதுவாக இதுவரை மல்டி ரோட்டர்கள் மட்டுமே அதிவேகம் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த UAV அதைவிட மூன்று மடங்கு அதிவேகமாக செல்லக்கூடியது மட்டுமல்லாமல் ஆறுகிலோ எடை தாங்குதிறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிகப்பெரிய விங்க்ஸ்பான் எலெக்ட்ரிக் செங்குத்து டேக் ஆப் மற்றும் லேண்டிங்கை (EVTOL )கொண்டது.

இந்த ட்ரோன்கள் ஹெல்த்கேர் இ காமர்ஸ் மற்றும் அக்ரி கமாடிட்டிக்கு மிகவும் ஏற்றது என ஸ்கை ஏர் மொபிலிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் ஸ்கை ஏர் மொபிலிட்டி நிறுவன CEO வான அங்கித் குமார் கூறுகையில் " நாங்கள் 2021 மத்தியில் இருந்து ஆர்டெமிஸில் பணிபுரிந்துவருகிறோம். இபோது விமான சரக்கு விநியோகத்திற்கான தொழில்நுட்பத்தை இந்தியாவில் காட்சிப்படுத்துவதில் பெருமைகொள்கிறோம். 

தற்போது பயன்படுத்தப்படும் தளவாட அமைப்பு தொழிநுட்பரீதியில் பின்தங்கியுள்ளது. மேலும் மனிதத்திறனையே அதிகம் சார்ந்துள்ளது. ஆனால் இந்த UAV மனித திறனை சார்ந்தது அல்ல. விரைவான டெலிவரிகள் சாலை வழியாக மற்றும் செல்வதற்கே கடினமான இடங்களுக்கும், இணைப்பு இல்லாத இடங்களுக்கும் இதன்மூலம் செல்வதால் விரைவான மாற்றம் கிடைக்கும். மேலும் இதனால் செலவுகள் மிக குறையும்.

இதுவரை தடுப்பூசிகள் வேளாண்பொருட்கள், பேரிடர் நிவாரண உதவிகள் போன்ற மக்கள் பயன்பாட்டிற்கான சேவைகளை எங்களது UAV செய்துவருகிறது" என அங்கித் குமார் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பாதுகாப்புப்படை மற்றும் எல்லைப்பாதுகாப்புப்படைக்கு இந்த UAV ட்ரோன்களை பயன்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.