24 special

ப்ராஜெக்ட் வேதா..! இஸ்ரோவிடமிருந்து விலகும் DRDO..?

DRDO
DRDO

புதுதில்லி : இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான DRDO பாதுகாப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த பயன்படும் 150 டன் எடைகொண்ட பாதுகாப்பு பயன்பாட்டிற்கான வேதா எனும் வாகனத்தை உருவாகியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த வேதாவை விரைவில் சோதிக்க உள்ளது.


இந்திய ராணுவப்படைகள் மற்றும் ஆயுதப்படைகள் தங்களது பாதுகாப்பு செயற்கைகோள்களை விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்த முன்னர் ரஷ்யா சீனா போன்ற நாடுகளையே பெரிதும் நம்பியிருந்தது. இஸ்ரோவின்  அபிரிமிதமான வளர்ச்சியை அடுத்து ஆயுதப்படைகளின் செயற்கைகோள்கள் முழுவதும் இஸ்ரோ மூலமாகவே விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகின்றன.

மேலும் இந்திய ஆயுதப்படைகள் செலுத்தும் ஒவ்வொரு செயற்கைகோளுக்கான செலவை ராணுவ அமைச்சகமே ஏற்றுக்கொள்ளும். இப்போது DRDO ரோட் மொபைல் வேதா வாகனத்தை உருவாக்கி வருவதால் இனி ஒவ்வொரு ஏவுதலுக்கும் இஸ்ரோவை சார்ந்தே இருப்பது மட்டுப்படுத்தப்படும் என DRDO வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில் இந்த பாதுகாப்பு செயற்கைகோள் திறனில் அதன் ஏவுதல் திறன்களை உயர்த்துவதில் இஸ்ரோவின் பங்கு சிறிதளவு இருக்கும். மேலும் இஸ்ரோ ஏவுதளத்தை பயன்படுத்தாமல் மேக் ஷிப்ட் ஏவுதளத்தில் இருந்து விரைவாக ஏவமுடியும் என DRDO கருதுகிறது. இந்தியாவின் அனைத்து பாதுகாப்பு செயற்கைகோள்களும் இஸ்ரோ ஏவுதளத்திலிருந்தே ஏவப்பட்டு வருகின்றன.

ஆனால் இஸ்ரோ இந்திய ஆயுதப்படை செயற்கைகோள்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்காமல் தனது வணிபரீதியான மற்றும் சொந்த பரிசோதனைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது. அதனால் பாதுகாப்பு செயற்கைகோள்கள் ஏவப்படுவதில் காலதாமதம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

இதற்க்கு எடுத்துக்காட்டாக இந்திய ராணுவப்படைக்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நாவிக் ஏவப்பட மூன்றாண்டுகள் காலதாமதமானது. எப்போதுமே செயற்கைகோள்களை ஏவுவதில் இஸ்ரோவை மட்டுமே நம்பியிருக்கும் சூழலை மாற்றவே DRDO இந்த வேதாவை உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.