
வளர்ந்து வரும் உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறி வருகின்றனர் ஒரு தனி நிறுவனத்தை தொடங்கி அதனை தனது கட்டுப்பாட்டில் வைக்கும் அளவிற்கு பெண்கள் தங்களது ஆளுமைகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். மேலும் பொருளாதார ரீதியாக பெண்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் சில பெண்கள் இந்த அபாயகரமான உலகில் தனது கனவை இழந்து வேறு பாதைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். படித்துவிட்டு வீட்டில் இருக்கும் குடும்ப பெண்களுக்கு வீட்டில் இருந்தபடியே பார்க்கும் வேலை கிடைத்தால் மிகவும் நல்லதாக இருக்கும் நமக்கும் ஒரு வருமானம் கிடைத்ததாக இருக்கும் என்று பல பெண்கள் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் லிங்கை பயன்படுத்தி பகுதி நேரவேலை மற்றும் முழு நேர வேலை செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால் அதனால் பல பெண்கள் மோசடியில் சிக்கிகொள்கின்றனர்.
அதுமட்டுமின்றி தனிமையில் இருக்கும் சில பெண்களின் நிலை அவர்களது வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஸ்டோரி போஸ்ட்டஸ் மூலம் கண்டறிந்து அவர்களை தொடர்பு கொண்டு அவர்களை தனிமையில் இருந்து வெளிக்கொண்டு வருவதாக பேசி மூளைச்சலவை செய்து தவறான கலாச்சாரத்திலும் அவர்களை ஈடுபடுத்துகிறார்கள். இதற்கு ஒரு கும்பலே வேலை பார்த்து வருகிறது என்று கூறினால் மிகையாகாது! சமீபத்தில் கூட இதே போன்ற ஒரு சம்பவம் தான் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது அதாவது வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் லூலூ என்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் தமிழகத்தில் குறிப்பாக தென்பகுதியில் உள்ள சில பெண்கள் தனிமையில் வாடுவதை அறிந்து கொண்டு அவர்களின் தனிமையை போக்குவராக கூறி கலாச்சார சீர் கேட்டில் இறங்கியது அம்பலமானது. இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இதனால் பல குடும்ப பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழுந்து வருகிறார்கள் என்று இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணே தைரியமாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளியாக இருக்கும் லுலு வெளிநாட்டில் இருப்பதாகவும் அவரை கண்டவுடன் பிடிப்பதற்கான லுக் அவுட் நோட்டிஸ்ஸை அனுப்பியது அதன்படியே அந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார் இருப்பினும் அவர் பல காரணங்களை நீதிமன்றத்தில் முன்வைத்து ஜாமீனில் வெளிவந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பத்திரிகை பெண் நிபுணர்களும் பிரான்ஸ் தமிழச்சியும் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தனர். அதுமட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் தமிழச்சி தனியார் யுடூப் சேனல்களில் பேட்டி அளித்த பொழுது அதில் பல பரபரப்பான தகவல்களை தெரிவித்தார் அதாவது இந்த விவகாரத்திற்கு பின்னால் ஒரு சாதாரண கும்பல் மட்டுமல்ல மிகப்பெரிய அரசியலே இருக்கிறது என்றும் அரசியலில் உள்ள பல பிரமுகர்கள் இதில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்றும் சில முக்கிய பிரமுகர்களின் பெயர்களையும் கூறி அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கினார்.
ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த பாடில்ல, ஆனால் இந்த விவகாரம் இன்னும் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது ஆரம்பத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்கிறார்கள் என்று நான் கூறியிருந்தேன் அதேபோன்று ஆண்களுக்கு நிகராகவும் தற்போது மேலை நாட்டின் கலாச்சாரத்தை பின்படுத்தி தங்களது வெறுமைகளையும் வறுமைகளையும் போக்குவதற்கு சில பெண்கள் குடிப்பழக்கத்திற்கும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்காகவே இந்த லூலு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிலர் சில பெண்களுக்கு நண்பர்களாக பழகி அவர்களை இது போன்ற போதைக்கும் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாக்குகிறார்கள் என பிரான்ஸ் தமிழச்சி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அது மட்டும் இன்றி ஒரு பெண் மதுபோதையில் உளறும் வீடியோவும் இணையத்தில் பதிவிட்டுள்ளார் அதுவும் தற்போது வைரல் ஆகி உள்ளது.