24 special

மிரட்டும் 118 மேஜிக் நம்பர் தீய சக்தி கூட்டணிகளிடம் கெஞ்சும் தூய சக்தி விஜய்யின் முகத்திரை கிழிந்தது அதிர வைக்கும் பின்னணி

MKSTALIN,VIJAY
MKSTALIN,VIJAY

தூய சக்தி" என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக்கொண்டு, தமிழக அரசியலில் ஏதோ ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தப் போகிறேன் என்று மேடைக்கு மேடை பேசிய  நடிகர் விஜய்யின் முகத்திரை, இன்று அதிகாரப் பசியால் கிழிந்து தொங்குகிறது. அன்று 2014-ல், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மெகா ஊழல்களை எதிர்த்து அன்னா ஹசாரே டெல்லியில் வீதிக்கு வந்து போராடியபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்து "ஊழலற்ற இந்தியா" பற்றிப் பேசிய அதே நடிகர் விஜய், இன்று அதே காங்கிரஸின் தயவில் முதல்வர் நாற்காலிக்காகக் கூட்டணி வைத்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல். அன்று எந்தக் கட்சியை ஊழலின் ஊற்றுக்கண் என்று அன்னா ஹசாரே அடையாளப்படுத்தினாரோ, அதே கட்சியின் தயவில் ஆட்சி அமைக்கத் துடிப்பது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்!


திமுக கூட்டணியில் இருந்து ஓடி வரும் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு "கூட்டணி ஆட்சி" அமைக்கத் துடிக்கும் விஜய்யிடம் ஒரு கேள்வி: இத்தனை காலம் திமுகவின் ஊழல் அமைச்சர்களோடு கைகோர்த்து நின்று, அதிகாரத்தைச் சுவைத்த அதே கட்சிகளின் ஆதரவோடு நீங்கள் எப்படி ஊழலற்ற ஆட்சியைத் தருவீர்கள்? மேடைக்கு மேடை "திமுகவின் ஊழல் அமைச்சர்களைச் சிறைக்கு அனுப்புவேன்" என்று வீர வசனம் பேசினீர்களே, இப்போது எங்கே அந்த தைரியம் த? உங்களை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் அந்தத் "தீய சக்தி" கூட்டணிக் கட்சிகள், திமுக அமைச்சர்கள் மீது கை வைக்க உங்களை அனுமதிக்குமா? மேலும் ஸ்டாலின்  முடிவே எங்கள் முடிவு என கூட்டணி கட்சிகள் தெரிவித்த பிறகும் நிர்மல்குமார் ஆதவ் அர்ஜுனா அருண்ராஜ் ஆகியோர்  திமுக கூட்டணி கட்சிகளின்  வசாலில் நிற்கின்றனர் 

விஜய்க்கு  ஆதரவு அளிக்கும் கட்சிகள் எந்த விநாடியும் ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்ற பயத்திலேயே விஜய்யின் ஒவ்வொரு நாளும் கழியும். தன் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளவே அஞ்சும் ஒருவரால், எப்படித் துணிச்சலாக ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்? ஊழல் அமைச்சர்களைப் பார்த்தால் இப்போதே பம்மிப் பதுங்கும் விஜய், உண்மையில் ஒரு "பொம்மை முதல்வராக" மட்டுமே இருக்கத் தகுதியானவர் என்று விமர்சனம் எழுந்துள்ளது. 

பழைய அரசியல்வாதிகளை விடத் தான் ஏதோ ஒரு படி மேலானவர் என்று காட்டிக் கொள்ள அன்னா ஹசாரேவின் பெயரைப் பயன்படுத்திய விஜய், இன்று அதே கொள்கைகளை அதிகாரத்திற்காகக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார். "மாற்று அரசியல்" என்பது வெறும் வாய் சவடால் தான் என்பதையும், அதிகாரத்திற்காக யாரிடம் வேண்டுமானாலும் மண்டியிட விஜய் தயார் என்பதையும் இந்தத் தேர்தலுக்குப் பிந்தைய கூத்துகள் நிரூபித்துவிட்டன. கொள்கையற்ற, தைரியமற்ற, மற்றும் ஊழலுக்கு அஞ்சும் ஒரு பலவீனமான கூட்டணியை வைத்துக்கொண்டு விஜய் நடத்தப்போகும் ஆட்சி, தமிழகத்தின் சாபக்கேடாகவே அமையும் என  தற்போதே மக்கள் பேச தொடங்கிவிட்டர்கள்.