நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர்க்கான 33% சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் குறித்து மக்களவையில் பேசிய திமுக எம் பி கனிமொழி கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து இருந்தார், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை பாஜக அரசியல் ஆக்குவதாக விமர்சனம் செய்து இருந்தார் அதோடு நில்லாமல் பெரியார், அண்ணா, கருணாநிதி என வசனம் எல்லாம் பேசினார் கனிமொழி.அதோடு நில்லாமல் இப்போது நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை உடனே நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன் என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் கனிமொழி,மேலும் தங்களது பங்கிற்கு தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் ஒருமையில் பேசி நாடாளுமன்றமே பெண்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு சட்டம் குறித்த விவாதத்தில் கடும் சர்ச்சையை வெடிக்க செய்தது. இப்படி டெல்லியில் திமுக மூத்த தலைவர்கள் வாக்குவாதம் செய்ய சத்தமில்லாமல் அமைதியாக ஒரே வார்த்தையில் முடித்து இருக்கிறார் மேயர் பிரியா.
பெருநகர சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் மண்டலம், 200வது வார்டு செம்மஞ்சேரியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தினை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியாவிடம் செய்தியாளர் ஒருவர் 33% மகளிர் இட ஒதுக்கீடு பற்றி எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டார் அதற்கு பிரியாவரவேற்கத்தக்கது. நல்ல விஷயமாக பார்க்கிறேன் பெண்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியான செய்தி என கூறினார்.இதை கொண்டு வந்து பெண்களுக்கு உரிமை தருவது வரவேற்கத்தக்கது. மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எனது வாழ்த்துகள் என சென்னை மேயர் பேட்டியளித்தார்.
அப்போது நிருபர் குறுகிட்டு இந்த நாடாளுமன்ற தேர்தலில் நடைமுறை படுத்த பட வில்லை காலம் தாழ்த்தும் செயல் என விமர்சனம் செய்கிறார்கள் என கனிமொழியின் குற்றசாட்டை கேட்க. மகளிர்க்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்ததே பெரிய செயல் நிச்சயம் வரவேற்கலாம் என ஒற்றை வரியில் முடித்து விட்டார்.இதையை பார்த்த உடன் பிறப்புகள் அங்கே மக்களவையில் கனிமொழி அக்கா உயிரை கொடுத்து விமர்சனம் செய்து இருக்கிறார், மேயர் பிரியாவோ வரவேற்று இருக்கிறார் காலம் தாழ்த்தும் செயல் கண்டிக்கதக்கது என்று தானே பிரியா பேசி இருக்க வேண்டும். இவரே முழுதாக வரவேற்கிறேன் என சொன்னால் அது மோடிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க படாதா என பலரும் புலம்பி வருகின்றனர்.