24 special

அதிமுகவிற்கு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய கொங்கு மக்கள்....!விரத்தியில் அதிமுக...!

edapadi, annamalai
edapadi, annamalai

கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை நுழையும் போது எது நடக்க கூடாது என நினைத்து அதிமுக காய் நகர்த்தியதோ அது தற்போது நடந்து இருப்பது அதிமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.அண்ணாமலை தொடங்கிய யாத்திரைக்கு இராமேஸ்வரத்தில் அதிமுகவை சார்ந்த  முன்னாள் அமைச்சர் உதயகுமாரை அனுப்பி ஆதரவு தெரிவித்தது அதிமுக தலைமை முதலில் யாத்திரை எல்லாம் பெரிய அளவில் எடுபடாது என நினைத்து கணக்கு போட்டது அதிமுக ஆனால் தென்காசியில் கூடிய கூட்டம் அதிமுக மற்றும் திமுகவை அசைத்து பார்த்தது.தனக்கு நெருக்கமான ஏஜென்சிஸ் மூலம் கணக்கு போட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கிடைத்தது அதிமுக வாக்குகள் மெல்ல மெல்ல பாஜகவை நோக்கி நகர்வது தெளிவாக தெரிந்தது. இருப்பினும் தென் மாவட்டம் என்பதால் அமைதியாக அதிமுகவினர் கடந்து சென்றனர்.


இந்நிலையில்தான் அண்ணாமலையின் யாத்திரை கொங்கு மண்டலமான காங்கேயம் பகுதிகளில் தொடங்க இருந்த நிலையில் அண்ணாதுரை குறித்து அண்ணாமலை தவறான கருத்துக்களை பேசியதாக திடீர் என ஆவேசமடைந்த அதிமுக ஜெயக்குமார் மூலம் பாஜக கூட்டணியில் இல்லை என அறிவித்தது.இவை அனைத்திற்கும் கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை யாத்திரை நடந்தால் இதுவரை அதிமுக வாக்கு வங்கியாக இருந்த வாக்குகள் பல பாஜகவிற்கு செல்லும் எனவும் பாஜகவிற்கு இவ்வளவு கூட்டம் இருக்கிறதா என சாமானிய மக்கள் பார்த்தாலே பாஜகவிற்கு நிச்சயம் மாறி விடுவார்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் பறக்க.உடனடியாக ஏதாவது ஒரு காரணத்தை கூறி அண்ணாமலையை பாஜக தலைமை பொறுப்பில் இருந்து இறக்க நினைத்தனர்,அதன் ஒரு பகுதியாக அண்ணாமலை பாஜக  மாநில தலைவராக இருக்கும் வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் பொதுவெளியில் தெரிவித்தனர்.

அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து இறக்கினாலே யாத்திரை தடை படும் கொங்கு மண்டலத்தில் நிகழ்ச்சி ரத்து ஆகும் என கணக்கு போட்டது அதிமுக, ஆனால் இவற்றை எல்லாம் பாஜக தேசிய தலைமை கண்டுகொள்ளவில்லை.இந்த சூழலில் தான் அண்ணாமலை நேற்று நடத்திய யாத்திரையில் குவிந்த கூட்டம் திமுகவை காட்டிலும் அதிமுகவை அலற செய்து இருக்கிறது. மடத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அண்ணாமலை நடந்து சென்று மக்களை சந்தித்த போது இது வரை இல்லாத அளவு எந்த கட்சியின் மாநில தலைவருக்கும் இல்லாத அளவு கூட்டம் கூடி இருக்கிறது.(மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏழை விவசாயிகள் என பலரும் தங்கள் வீட்டு வாசல் தொடங்கி மாடி என பல இடங்களில் இருந்து அண்ணாமலையை பார்க்க கூடினர் இதுவரை கொங்கு மண்டலம் பார்க்காத கூட்டம் பாஜகவிற்கு நேற்று கூடியது இவ்வளவு மக்கள் யாத்திரயை பார்க்க குவிவார்களா? என்ற ஆச்சர்யத்தை கொடுத்தது.

பாஜகவிற்கு மக்கள் மத்தியில் குறிப்பாக கொங்கு மண்டல மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது நேற்றைய அண்ணாமலையின் யாத்திரை )தமிழகம் முழுவதும் அதிமுக படு தோல்வியை சந்தித்த போதும் கொங்கு மண்டலத்தில் கிடைத்த வெற்றியை வைத்தே எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றியதுடன் எதிர்கட்சி தலைவர் பொறுப்பையும் கைப்பற்றினார், பாஜக கூட்டணியில் இருந்த காரணம் ஒன்றிற்கு தான் அதிமுக கொங்கு மண்டலத்தில் வெல்ல காரணம் என பலரும் கூறிய நிலையில் அதை எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் ஏற்க மறுத்தனர்.ஆனால் தற்போது அண்ணாமலை கொங்கு மண்டலத்தில் நடை பயணத்தை தொடங்க உண்மை கள நிலவரம் என்ன என்பதை மக்கள் கூட்டமே வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது, பாஜகவின் உண்மையான செல்வாக்கு என்ன என்பது முதன் முறையாக பாஜக தொண்டக்களுக்கே தெரிய தொடங்கி இருப்பதால் இனி தனித்து தேர்தலை சந்தித்தாலும் வெற்றி தான் என்ற முடிவிற்கு வந்து விட்டனர் கொங்கு மண்டல மக்கள்.