24 special

முதல்வருக்கு வந்த அடுத்த பிரச்சனை ...! புகார்களை அடுக்கிய பெண்...!

mk stalin
mk stalin

தமிழகத்தில் நாளுக்கு நாள் நில அபகரிப்பு புகார்கள் அதிகரித்து வரும் வேலையில் முதல்வர் தனி பிரிவில் புகார் கொடுக்க வந்த பெண் கண்ணீர் விட்டு கதறிய சம்பவமும் மேலும் திமுக எம் பி மற்றும் மகன் மீது புகாரை அடுக்கிய சம்பவமும் தற்போது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் முதலமைச்சர் தனிப்பிரிவில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மீது நில ஆக்கிரமிப்பு மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 ஏக்கர் பரப்பளவு உள்ள தனது நிலத்துக்கு வரவிடால் ஞானதிரவியம் எம்பி, அவரது மகன் ராஜா மற்றும் அடியாட்களை வைத்து தன்னை தாக்கியதாகவும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.


தனது நிலத்துக்கும் அவரது நிலத்திற்கும் செல்லும் வழிப்பாதையை வேலிமுள் வைத்து அடைத்திருப்பதாகவும், இதனால் தனது 3 ஏக்கர் நிலத்துக்கு வரவிடாமல் ஞானதிரவியம் எம்பி, தடுப்பதாகவும் நிலத்தை அபகரிக்கும் வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் மேலும் ஞான திரவியம் எம் பி யின் மகன் தாக்கியதாகவும் தெரிவித்தார்அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், மகளிருக்கு முன்னுரிமை அளிக்கும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.பின்னர் ஏன் இந்த நிலை என கேட்க நாங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் நல்லது செய்வார் என்று தானே அவருக்கு ஓட்டு போட்டோம் ஆனால் இப்படி எம் பி மகனே நில அபகரிப்பில் ஈடுபடலாமா? இதற்கு யார் பொறுப்பு உடனடியாக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேமராவிற்கு பின் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சுற்றி இருப்போரை கலங்க செய்து இருக்கிறது.