இலவச பேருந்தில் இடம் பிடிக்க சென்ற பெண்கள் நடு ரோட்டில் இறக்கிவிட பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பினர் இப்போ சந்தோசமா உங்களுக்கு என கேட்ட வீடியோ காட்சிகள் தற்போது ஆளும் கட்சியான திமுகவிற்கு பெரிய தலைவலியை கொடுத்து இருக்கிறது.கோவை கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசுப் பேருந்து கொடுமுடியிலிருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கோவை - கரூர் சாலையில் வந்து கரூர் பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது திருக்காம்புலியூர் ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் ஏறிய பெண்கள் கொடுமுடி செல்ல இருக்கை பிடித்து அமர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.அப்போது, முன்பக்கமாக அதிகமாக பெண்கள் ஏறிக் கொண்டு அவர்கள் நடத்துனருக்கு கூட வழி விடாமல் நின்று கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் கோபமடைந்த ஓடுநரும், நடத்துனரும் பேருந்தை விட்டு இறங்கி இடம்பிடிக்க ஏறிய பெண்கள் கீழே இறங்கினால் தான் பேருந்தை எடுப்போம் எனக் கூறி நின்று கொண்டனர்.அப்போது அங்கு வந்த போக்குவரத்து பெண் காவலர் பேருந்தை எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தியதை அடுத்து பேருந்து நிலையத்திற்குப் பேருந்தை ஓட்டிச் சென்றனர். அப்போது, பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் பேருந்தை எடுக்குமாறு கூறிய போது இறங்க மறுக்கும் பெண்களை பார்த்து மரியாதை இல்லாமல் ஒருமையில் நடத்துனர் பேசியுள்ளார்.அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. மகளிர் இலவச பேருந்து என்பதால்தான் காத்திருந்து பெண்கள் அந்த வண்டியில் முண்டி அடித்து பல மணி நேரம் காத்திருந்து வண்டியில் ஏறினார்கள் ஆனால் அவர்களை பாதியில் இறக்கி இப்படி அவமானம் செய்ய வேண்டுமா?இப்போது பெண்களின் மாண்பு பறி போகவில்லையா? இப்போது உங்களுக்கு சந்தோசமா முதல்வரே என வேதனை தெரிவிக்கின்றனர் மகளிர் அமைப்புகள்...!