24 special

2 ஜி ஊழல்..! காங்கிரசை கிண்டலடித்த பிரதமர் மோடி..!

mamata banerjee and modi
mamata banerjee and modi

புதுதில்லி : இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற முக்கியமான ஊழல்களில் 2 ஜி ஊழல் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது என சொன்னால் அது மிகையாகாது. அதில் சிக்கிய பெருந்தலைகள் பல. அதில் தமிழகத்தை சேர்ந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் திகாரில் கம்பிகளுக்குப்பின்னால் இருந்ததும் வரலாறு. 


இந்நிலையில் நேற்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர்பேசுகையில் காங்கிரசை மறைமுகமாக தாக்கினார். தொலைத்தொடர்பு துறையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அதிவேக வளச்சியடைந்துள்ளதை குறிப்பிட்டார்.

" 2 ஜியால் ஏற்பட்ட விரக்தி ,ஊழல் மற்றும் கொள்கை முடக்கம் ஆகியவற்றில் இருந்து விலகி நாடு  3ஜி 4ஜி என வேகமாக முன்னேறி தற்போது 5ஜி மற்றும் 6ஜி என விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இது ஒரு சகாப்தம்.தன்னம்பிக்கை மற்றும் ஆரோக்கியமான ஒருபோட்டி  எவ்வாறு சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பன்மடங்கு விளைவுகளை உருவாக்கும் என்பதற்கு நமது தொலைத்தொடர்புத்துறை ஒரு எடுத்துக்காட்டு.

5ஜி தொழில்நுட்பம் நாட்டின் நிர்வாகத்திலும் வணிகத்திலும் எளிமையான வாழ்விலும் சாதகமான மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது. இது நம் தேசத்தின் கல்வி,சுகாதாரம். உள்கட்டமைப்பு, தளவாடங்கள் என அனைத்து துறையிலும் வளர்ச்சியை அதிகரிப்பதோடு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த 5ஜி டெஸ்ட்பெட் தொலைத்தொடர்புத்துறையில் முக்கியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் நாட்டின் தன்னிறைவுக்கான ஒரு முக்கியமான ஒரு படியாகும்" என பிரதமர் தெரிவித்தார்.

இதனிடையே ஐ.ஐ.டி மெட்றாஸ் தலைமையிலான மொத்தம் எட்டு நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு திட்டமாக உருவாக்கப்பட்ட 5ஜி டெஸ்ட் பெட்டை  பாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்று காணொளிவாயிலாக திறந்துவைத்தார். 2ஜி ஊழலை மறைமுகமாக குறிப்பிட்டு காங்கிரசை சாடியிருப்பது காங்கிரஸாரிடையே சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.