
விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.இந்நிலையில், சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் திட்ட அறிக்கையை இந்திய விமானப்படை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டில் தயாரிக்க திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா உலக அளவில் பொருளாதார புரட்சி செய்து வருகிறது, உலக வல்லரசு நாடுகளை விட வேகமான வளரும் பொருளாதர நிலையினை பெற்றுள்ளது. இன்னொரு புறம் விஞ்ஞானம், வான்வெளி, உள்நாட்டு உற்பத்தி அனைத்தும் வளர்கின்றன. அதோடு ராணுவமும் இந்திய முப்படைகளும் அதி வேகத்தில் புது வடிவம் பெற்று, உலகின் முன்னணி வல்லரசாக நாட்டை கொண்டு சென்று கொண்டிருக்கிறர் பிரதமர் மோடி.
தற்போது இந்தியாவின் பழைய மிக் விமானங்களை நீக்கப்பட்ட பிறகு, இந்திய விமானப்படையில் மீதமிருக்கும் 29 படை பிரிவுகள் போதுமானதல்ல. பாகிஸ்தான் – சீனாவை ஒருசேர சமாளிக்க 42 படை பிரிவுகள் தேவை . அதற்காகவே மோடி அரசு மின்னல் வேகத்தில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ரஷ்யா, அமெரிக்கா ஆகியோரிடம் தஞ்சம் புகாமல், பிரான்ஸ் பக்கம் தான் இந்த முறை இந்தியா சென்றுள்ளது. பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரிக்கும் ரபேல் விமானங்கள் ஏற்கனவே இந்தியா வந்துவிட்டன. ஆனால் 36 விமானங்கள் போதாது. முழு தேவையை பூர்த்தி செய்ய 150 ரபேல் விமானங்களை தேவை என்பதனால் ரபேல் விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது.
இனி ஐதராபாத் நகரமே ரபேல் உற்பத்தியின் அடையாளமாக மாறவிருக்கிறது. இந்திய தனியார் நிறுவனங்கள் பிரான்சுடன் இணைந்து உற்பத்தியை மின்னல் வேகத்தில் தொடங்கியுள்ளன. இது வெறும் விமான திட்டமல்ல – இந்தியாவின் வான்வழி பாதுகாப்பில் புரட்சியை எழுதும் திட்டம் ஆகும்
இதோடு கடற்படை வளர்ச்சியும் அதே வேகத்தில் நடைபெறுகிறது. ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு கப்பல்கள் தயாரிக்கும் திட்டம் முன்னேறி வருகிறது. மூன்றாவது விமான தாங்கி கப்பல் தயாரிப்பும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் உச்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது "கிரேட் நிக்கோபர்" திட்டம். உலகின் முக்கிய கடல்பாதைகளில் ஒன்றான அந்தமான் – நிக்கோபார் வழித்தடத்தை, வர்த்தகமும் ராணுவமும் இணைந்த பிரமாண்ட மையமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. சிங்கப்பூர், துபாய் போல வணிக வளர்ச்சி மையமாகவும், அதேசமயம் சீனாவை கட்டுப்படுத்தும் காவல் நிலையமாகவும் இந்த பகுதி வளர்க்கப்படும்.
இந்தியாவின் முகத்தையே மாற்றும் புரட்சிகர வேலைப்பாடுகள் நடக்கின்றன. பொருளாதாரமும் பாதுகாப்பும் இரு கைகளாக வேலை செய்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலத்தில், மூன்று படை தளபதிகளின் மாநாடு தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு படை தளபதி அனில் சவுகான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இந்த மாநாடு மிக முக்கியமானது என்பதால் உலக கவனமும் இதிலேயே உள்ளது.