
உலக அரசியலை எப்போதும் பரபரப்பாக்கும் நபர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். எப்போது பார்த்தாலும் எதையாவது பேசி வம்பிழுப்பதை வாடிக்கையாக வைத்து வருபவர் . குறிப்பாக அவர் தனது சொந்த சமூக வலைதளத்தில் வெளியிடும் பதிவு எப்போது பார்த்தாலும் எதாவது சர்ச்சையை உண்டாக்கும். அப்படிதான் இந்த முறை இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பதற்றத்தை நான் தான் குறைத்தேன் என மார்தட்டி பேசிவந்தார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. ஆனால் அதையே மீண்டும் மீண்டும் பேசி வந்தார் டிரம்ப்.
இதற்கிடையில் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது இஷார் தாக் முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் உண்மையை போட்டு உடைத்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை நான் தான் தலையிட்டு நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையை எடுத்தது.டிரம்ப் சொல்வது உண்மை இல்லை
பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் அதிரடி தாக்குதலால் அரண்டு போன பாகிஸ்தான், சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து இருநாடுகளுக்கும் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதில் எந்த ஒரு மூன்றாம் தரப்பு நாடும் தலையிடவில்லை. அப்படியான தலையீட்டையும் ஏற்க மாட்டோம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வர்த்தகத்தை காட்டி இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான மோதலை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து வருகிறார். இதற்கிடையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரின் கருத்து டிரம்ப்பின் மூக்கை உடைத்துள்ளது.
அவர் கூறியதாவது : அமெரிக்க வெளியுறவு செயலர் ரூபியோ வாயிலாக எனக்கு மே 11 காலை 8.17 மணிக்கு போர் நிறுத்தம் குறித்த தகவல் வந்தது. இந்தியாவுக்கும் உங்களுக்கும் தனித்த இடத்தில் விரைவில் ஒரு பேச்சுவார்த்தை இருக்கும் என்று எனக்கு சொல்லப்பட்டது. ஆனால், ஜூலை 25 ஆம் தேதி அமெரிக்க வெளியுறவு செயலர் ரூபியோவை நான் சந்தித்து பேசினேன்.
அப்போது, இந்த விவகாரம் (இந்தியா - பாகிஸ்தான்) இரு தரப்பு நாடுகளுக்கு இடையேயானது என்று இந்தியா கூறிவிட்டது" என ரூபியோ கூறினார். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டது இல்லை. இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராகவே உள்ளது. இந்தியா பேச்சுவார்த்தைக்கு விரும்பவில்லை என்றால், நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது" என்றார். "இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நானே முடிவுக்கு கொண்டு வந்தேன்" என டிரம்ப் திரும்பத் திரும்ப கூறி வரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் அமைச்சரே "இந்தியா இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று கூறியிருப்பது, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, கடந்த 10 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் "இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது" என்று அறிவித்தார். , இந்தியா துவக்கத்திலிருந்தே இதனை மறுத்து வந்தது.டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டது குறித்து, சிறிது நேரத்தில் அன்றைய தினமே பதிலளித்த இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திவைத்துள்ளன" என்று கூறினார்.
இதை நம்பாமல் ராகுல் காந்தி அமெரிக்கா டிரம்ப் தான் போரை நிறுத்தினார்களா என கேள்விமேல் கேள்வி கேட்டு வந்தார். தற்போது பாகிஸ்தான் கூறியது ராகுல் முகத்திலும் கரியை பூசிவிட்டார்கள்.