
பல வருடங்களாக இந்திய அரசுத் துறைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் சாப்ட்வேர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன.
எல்லா அலுவலகங்களிலும் Google Workspace, Microsoft 365 ஆகியவை தான் முக்கிய பங்கு வகித்தன.
ஆனால் அதே நேரத்தில் அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராக தன் வர்த்தக போரை தொடர்ந்து நடத்தி வந்தது.டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு 50% வரை வரி விதித்தார்.இந்தியர்களுக்கு முக்கியமான H-1B விசா கட்டணம் ரூ.88 லட்சம் என உயர்த்தப்பட்டது.இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை செய்வது கடினமாக்கப்பட்டது.
இதில் அமெரிக்கா ஒரு தெளிவான செய்தியைத் தந்தது –“உங்கள் திறமையை நாங்கள் பயன்படுத்துவோம், ஆனால் உங்களுக்கு இடம் இல்லை.”இந்த அகந்தைக்குப் பதிலாக, பிரதமர் மோடி, தனது வழக்கமான உறுதியான பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். “நமக்குத் தேவையானது அமெரிக்க சாப்ட்வேர் அல்ல, நமது இந்திய திறமையே!”அது தற்போது Make in India – டிஜிட்டல் புரட்சியாகமாறியுள்ளது
மோடி ஏற்கனவே “Make in India” என்ற முழக்கத்தால் உலகின் கவனத்தை ஈர்த்தவர்.இப்போது அந்த சிந்தனை “Digital Make in India” என்ற புதிய பரிமாணம் எடுத்துள்ளது. அதன் முதற்கட்டமாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஒரு முக்கியமான உத்தரவை வெளியிட்டுள்ளது:
இனிமேல் அனைத்து அலுவலகங்களிலும் ஜோஹோ சாப்ட்வேர்களையே பயன்படுத்த வேண்டும்.
வெளிநாட்டு சாப்ட்வேர்கள் – தடை. “Zoho”சாப்ட்வேர் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு அவர்களுடையது.
பள்ளிக்கல்வி துறைக்கு மத்திய அரசு போட்ட உத்தரவு ஒரு நிறுவனத்துக்கு மட்டுமல்ல இந்திய திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் வழங்கப்பட்ட மிகப்பெரிய அங்கீகாரம்!
தமிழ்நாட்டில் இருந்து உலகத்தை வென்ற நிறுவனம் தான் Zoho Corporation.
அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, “அமெரிக்காவை விட்டு இந்தியா திரும்பியவர்” – அவர் இந்திய கிராமங்களில் இருந்து உலகத்தரமான சாப்ட்வேரை உருவாக்கி காட்டினார்.
Zoho Office Suiteல் உள்ள சில முக்கிய சேவைகள்: Zoho Writer – ஆவணங்கள் தயாரிக்க
Zoho Sheet – கணக்குப் பத்திரங்கள்Zoho Show – பிரசென்டேஷன்கள் Zoho WorkDrive – கிளவுட் சேமிப்பு என கூகுளுக்கு போட்டியாக இறங்கியுள்ளது.
உத்தரவின் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு தெளிவான சைகை அனுப்பியுள்ளது:
“அமெரிக்கா மட்டும் தொழில்நுட்ப உலகின் மையம் அல்ல. இந்தியாவும் ஒரு உலகத் தலைவன் என்று..
இந்த முடிவு அமெரிக்காவுக்கான எச்சரிக்கையும் கூட.ஏனெனில், பல தசாப்தங்களாக இந்தியா மென்பொருள் திறமையால் அமெரிக்காவுக்கு உதவி செய்து வந்தது.
இப்போது அந்த திறமை இந்தியாவுக்கே திரும்புகிறதுமோடி அரசு, இந்தியா வெளிநாட்டு சார்பிலிருந்து விடுபட்டு முழுமையான தன்னிறைவு இந்தியா நோக்கத்தில் பயணிக்கிறது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் — இவர்கள் மூவரும் Zoho பயன்பாட்டை தங்கள் துறைகளில் ஏற்கனவே தொடங்கியுள்ளனர். மேலும் 140 கோடி மக்கள் கொண்ட இந்தியா தன் சொந்த மென்பொருளை உருவாக்கி பயன்படுத்த முடியும் என நிரூபித்துவிட்டது.
இன்றைய உலகம் முழுவதும் மோடியின் இந்த நடவடிக்கையை கவனித்து பார்க்கிறது.இந்தியா”மோடியின் தலைமையில் ஒரு புதிய டிஜிட்டல் யுகத்தில் நுழைகிறது இனி நாம் பயன்படுத்தும் சாப்ட்வேர், நாம் உருவாக்கியதே என பெருமை கொள்ளலாம்!