24 special

ஊடகங்கள் மூடி மறைத்த விஷயம் வெளியானது. ..! புதிய தலைமுறைக்கு நேர்ந்த கதி! வெளிச்சம் போட்டு காட்டிய அண்ணாமலை

ANNAMALAI,VIJAY
ANNAMALAI,VIJAY

கடந்த 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் துயரத்தை உண்டாக்கியது. 


இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து த.வெ.க மாவட்ட செயலாளர்கள் இருவரை கைது செய்தனர். தொடர்ந்து, த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக  வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  தமிழக வெற்றி கழகத்தின் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார் நீதிபதி என். செந்தில் குமார். மேலும் திமுக அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  தி.மு.க அரசின் தவறை சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை சேனல் அரசு கேபிளில் இருந்து முடக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ”கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது தி.மு.க அரசு

ஊடகங்கள் தி.மு.க அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  அதற்குத்தான், பொதுமக்கள் யாருமே பார்க்காத குடும்பத் தொலைக்காட்சிகளை வைத்திருக்கிறீர்களே? மக்கள் பிரச்சினைகளை, கேள்விகளை வெளிக்கொள்ளும் ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்?  தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதலமைச்சர் சொந்தத் தொகுதியிலேயே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கின்றனர். 

தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து நிற்கின்றன. இப்படி ஒரு இருண்ட சூழலில் தமிழகத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று பாஜக தலைவர்நயினார் நாகேந்திரனும் அரசு கேபிள் இணைப்பில் 

புதிய தலைமுறை சேனலைத் தமிழ் சேனல்களின் வரிசையுடன் இடம்பெறச்செய்யாமல் பிற மொழி சேனலாகப் பட்டியலிட்டு திமுக அரசு முடக்கியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அதே போல, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் ஜனம்  சேனலையும் அரசு கேபிள் இணைப்பில் இடம்பெறச் செய்யாமல் தடுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

தேர்தல் நெருங்கும் வேளையில், தங்கள் ஆட்சியின் தவறுகளை வெளிப்படுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து முடக்கப்பார்க்கும் திமுக அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று, தனக்கு எதிரான செய்திகள் வெளியே வரக்கூடாது எனத் தொலைக்காட்சி சேனல்களின் இணைப்பையும் முடக்கிவருவது திராவிட மாடலின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

"சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும்" என்று சர்வாதிகார அரசு நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. எத்தனை திரையிட்டு மறைத்தாலும், திசைதிருப்பு நாடகங்களை நடத்தினாலும் மக்கள் மேடையில் திமுக  அரசின் அனைத்துத் தவறுகளும் பட்டியலிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் பாசிச திமுகவுக்குத் தக்க தண்டனை வழங்கப்படும் என கூறியுள்ளார்