24 special

“மோடி சொன்னா இனி உலகமே கேட்கும்! இந்தியா தொடங்கியது உலக வங்கி! உலக பொருளாதாரத்தை மாற்றிய பாரதம்

PMMODI,
PMMODI,

இந்தியா எடுத்திருக்கும் இந்த புதிய முடிவு, உலக பொருளாதார வரலாற்றிலேயே ஒரு பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இதுவரை உலக நாடுகள் கடன் வேண்டுமானால் அவசியம் IMF அல்லது உலக வங்கி என்ற இரு கதவுகளையே தட்டி நின்று வந்தன. அந்த இரண்டுமே மேற்குலக அரசியல் கோட்பாடுகளின் கீழ் செயல்படுவதால், நிதி உதவியைப் பெறும் நாடுகள் பல்வேறு கடுமையான நிபந்தனைகளையும், உள்நாட்டு பொருளாதார மாற்றங்களையும் ஏற்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தன. அந்த நிலையை முற்றிலும் மாற்றும் வகையில் இந்தியா தனது தேசிய உள்கட்டமைப்பு நிதி மற்றும் மேம்பாட்டு வங்கியான NaBFID-ஐ, Infrastructure Development Bank (IDB) என்ற புதிய பெயரிலும், புதிய நோக்கத்திலும் உலகளாவிய வங்கியாக  உருவாக்கியுள்ளது.


இந்தியா இன்று உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் புதிய வங்கியை தொடங்கியுள்ளது. இது வெறும் வங்கி தொடக்கம் அல்ல; உலக பொருளாதாரத்தை மாற்றும், இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்தும் வரலாற்று தருணம். இதைச் செய்து காட்டியவர் பிரதமர் நரேந்திர மோடி. 

இந்த அமைப்பு இந்தியாவின் உள்நாட்டு திட்டங்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், தற்போது இது சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. IDB என்ற பெயரில் உலக நாடுகளுக்கும் நிதி வழங்கும் வலிமையான நிறுவனம் என்ற புதிய அடையாளம் கிடைத்துள்ளது. இதற்கான காரணம் இந்தியா கடந்த சில வருடங்களாக உலகளவில் எடுத்துவரும் தன்னம்பிக்கை நிறைந்த பொருளாதார, புவிசார் அரசியல் தடம். 

இந்தியா உருவாக்கியுள்ள IDB முறைஆசிய  நாடுகளுக்கு புதிய நம்பிக்கை காட்டியுள்ளது . இந்த வங்கி எந்த நாட்டிடமும் அரசியல் நிபந்தனைகளை விதிக்காது. திட்டம் நடைமுறைக்கு ஏற்றதா, அந்த நாடு உண்மையாக முன்னேற விரும்புகிறதா என்பதை மட்டுமே பார்க்கும். செலவு மிக அதிகமாகும், பயன் குறைவாக இருக்கும் ஆடம்பர திட்டங்களுக்கு இந்த வங்கி கடன் வழங்காது. அதற்கு பதிலாக, மக்களுக்கு நேரடியாக பயன் தரக்கூடிய, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக்கூடிய திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியாவின் டிஜிட்டல் பப்ளிக் உள்கட்டமைப்பு—ஜன் தன, ஆதார், மொபைல் முறை—இவற்றின் அடிப்படையில் சிறிய முதலீடு , ஆனால் தாக்கம் மிகுந்த திட்டங்களுக்கு உதவியும் வழங்கும்.

முக்கியமாக, இந்த வங்கியின் நோக்கம் நாடுகளை அடிமைப்படுத்துவது அல்ல. அவர்களது பொருளாதார, அரசியல் தன்னாட்சியை குலைக்காமல், அவர்களின் வளர்ச்சிக்காக உதவுவது. இதுவே இந்தியா உலகுக்கு காட்டும் பெரிய வித்தியாசமான அணுகுமுறை.  யார் உலகத்தை ஆள வேண்டும் என்பதை மேற்குலக நாடுகளே தீர்மானிக்கும் காலத்திற்கு முடிவு கட்ட தொடங்கியுள்ளது. அதற்காகவே  IDB-யை உருவாக்கியுள்ளது 

இது BRICS அமைப்பின் வலிமையை மேலும் உயர்த்தும். இதன் மூலம், பல நாடுகள் IMF, World Bank ஆகியவற்றின் கடுமையான நிபந்தனைகளிலிருந்து விலகி, “அழுத்தமில்லாத நிதி உதவி” என்ற புதிய திசையைத் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் மேற்குலக நாடுகளில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், இதுவரை உலக பொருளாதாரத்தை அவர்கள் கட்டுப்படுத்தி வந்தனர். அந்த கட்டுப்பாட்டில் இந்தியா பேரிடியை இறக்கியுள்ளது.

சுருக்கமாகச் சொல்வதானால், இந்த வங்கி வெறும் நிதி நிறுவனம் அல்ல.இது உலக பொருளாதாரத்தை மாற்றும் புரட்சி.இது இந்தியாவின் தன்னம்பிக்கையை, உலகத் தலைமை திறனை காட்டும் சாதனை.மோடியின் தலைமையில் இந்தியா இன்று உலக நாடுகளுக்கு உதவும் புதிய பாதையைத் தொடங்கி, “இந்தியா உலகத்தை வழிநடத்தத் தொடங்கியுள்ளது” என்ற வரலாற்று பக்கத்தை எழுதியுள்ளது.