
இந்தியாவுடானான போரில் நாங்கள் தலையிட முடியாது என பேசிய அமெரிக்கா திடீர் என இந்தியா பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தேன் என டிரம்ப் அறிக்கை கொடுத்தது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது ஏன் காரியம் இல்லாமல் அமெரிக்கா தலையிடாதே என பலரும் நினைத்த நிலையில் நேற்றைய தினம் பிரதமர் மோடி பேசியதில் இருந்தே பல உண்மைகள் வெளிவந்து இருக்கின்றனர்
இந்த நிலையில் ஏன் உலக நாடுகள் இந்தியா பாகிஸ்தான் போரை உடனடியாக தடுக்க நினைத்த காரணம் தற்போது வெளியாகி அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது
இந்தியா - பாகிஸ்தான் இடையே திடீர் உருவான மோதல் சர்வதேச சமுதாயத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இந்த முறை எடுத்த கடுமையான நடவடிக்கைகள் உலக நாடுகள் பலவற்றின் தூக்கத்தை கெடுத்தது என்றே கூறலாம்.
இந்தியா, கடந்த சில ஆண்டுகளாகவே சொந்தமாக வடிவமைத்து உருவாக்கிய வான் பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு திட்டங்களை முழு சக்தியுடன் செயல்படுத்தியுள்ளது. இதில், பாகிஸ்தானின் முன்னணி ரேடார் அமைப்புகளை முற்றிலுமாக முடக்கி, பாதுகாப்பு சுவர் இல்லாத நிலைக்கு கொண்டு சென்றது.
இதையடுத்து பாகிஸ்தானின் எல்லைக்குள் ஊடுருவி, முக்கிய ராணுவ தளங்களை வெற்றிகரமாக தாக்கியது. பாகிஸ்தான் இந்திய எல்லை நோக்கி ஏவிய மிஸ்ஸைல்கள் அனைத்தையும் இந்திய வான் பாதுகாப்பு முறைகள் வானிலேயே சுட்டு வீழ்த்தன,
இந்த தாக்குதலின் மூலம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்தியாவின் அடுத்த நகர்வே. பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுதக் கிடங்கை கண்டறிந்து சரியாக தாக்கி உலக வரலாற்றில் புதிய பக்கத்தை இந்தியா எழுதியது. இதுவரை எந்த நாடும் இதுபோல் அனு ஆயுத இருப்பிடத்தை தாக்கி சாதித்ததே இல்லை.
இதில் குறிப்பிடத்தக்கது, அமெரிக்கா தயாரித்த அதிநவீன விமானங்கள் மற்றும் சீனாவின் 4th generation விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு முறைகள் சுலபமாக கண்காணித்து, அவற்றை தகர்த்து, வான்வழிப் போரில் அதிரடி வெற்றி பெற்றது.
இந்தியா பயன்படுத்திய செயற்கைக்கோள்கள், நவீன ரேடார் முறைகள், வான் பாதுகாப்பு முறை, எலக்ட்ரானிக் யுத்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் அமெரிக்கா மற்றும் சீனாவின் செயல்பாடுகளை கூட தாண்டிய அளவிற்கு செயல்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் இந்தியா காட்டிய உள்நாட்டு தயாரிப்பு வலிமை மற்றும் ராணுவ திறமை, உலக ஆயுத சந்தையில் இந்தியாவின் மதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. இந்த வளர்ச்சியை கவனித்த அமெரிக்கா, இதை மேலும் முற்றுப்படுத்த உலக நாடுகளுடன் சேர்ந்து உடனடியாக தலையிட்டது.
இந்த தாக்குதல் உலக நாடுகள் எதிர்பார்க்காத அளவுக்கு சென்றுவிட்டதாலும், இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் எதிர்கால பாதுகாப்பு வர்த்தகத்தில் இந்தியாவை முக்கிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதையும் இந்த சம்பவம் நிரூபித்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்ச்சியாக சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.இந்தியாவின் மதிப்பு உயர்ந்தால் இதுவரை ஆயுத துறையில் முன்னேறியுள்ள அமெரிக்காவிற்கு பெரிய அடி விழும் என்பதால் தான் டிரம்ப் தலையிட்டாதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் தொடங்கி அந்த நாட்டின் பல முக்கிய தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு போரை நிறுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர் ஆனால் இந்திய பிரதமர் மோடி எங்குமே டிரம்ப் பெயரையோ உலக நாடுகள் பெயரை குறிப்பிடவில்லை மாறாக பாகிஸ்தான் நேரடியாக இந்தியாவிடம் கெஞ்சியது என்ற உண்மையை உரக்க சொன்னதுடன் இந்தியாவிர்கு எந்த நாடும் மத்யஸ்தம் செய்ய தேவையில்லை எனவும் குறிப்பிட்டு அதிரடி காட்டினார்.
இந்தியாவின் சொந்த தொழில்நுட்பம் உலக நாடுகளை கலங்க செய்து இருப்பது மட்டுமே இப்போது தெளிவாக தெரியவந்து இருக்கிறது