24 special

திமுக உடன் பிறப்புகளை புலம்ப வைக்கும் முரசொலி முகநூல்...?

mk stalin
mk stalin

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை நிறுவனமான முரசொலியில் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கடந்த வாரம் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் முகநூல் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்தது செய்திகளில் வெளியானது. ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்ட முகநூல் பதிவிலிருந்து பல ஆபாசமான வீடியோக்கள் மற்றும் சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடிய வீடியோக்கள் வெளிவந்துள்ளதாக அந்த முகநூல் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.


இந்த நிலையில் இதற்கு மேலும் முகநூலை ஹேக் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் அமெரிக்க பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடப்பட்டதாக முரசொலி நிர்வாக மேலாளர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனால் தனது பேஸ்புக் பக்கத்தை மீட்க முடியாமல் முரசொலி நிறுவனமும் திமுகவும் தவிர்த்து வந்தது. இதற்கு அடுத்து நேற்றைய தினம் முரசொலியின் பேஸ்புக் பக்கத்தை முற்றிலுமாக நீக்கியது facebook நிறுவனம். மேலும் இதற்கு முன்பாக திமுகவின் ஐடி விங்கிற்கு ஆட்கள் தேவை என்றும் ஆட்கள் சேர்ப்பவர்கள் முதல்வரை சந்திக்கலாம் என்ற வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ ஐ டி விங் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது.

அதாவது கடந்த தேர்தலில் திமுகவின் ஐடி விங் மேற்கொண்ட பிரச்சாரம் என்பது தமிழகத்தில் ஒரு மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது தொலைக்காட்சியிலும் சரி இணையதளமானாலும் சரி எந்த ஊடகங்களில் எல்லாம் மக்களை தொடர்பு கொள்ள முடியுமோ அவை அனைத்திலும் திமுகவிற்கு ஆதரவாக மக்களை மாற்றும் வகையிலான வாக்கியங்களும் பாடல்களும் வீடியோக்களும் வெளியிடப்பட்டு பகிரப்பட்டது. அந்த அளவிற்கு திமுக இணையதள பிரச்சாரம் கடந்த 2019 மற்றும் 2021 தேர்தல்களில் முழு வேகத்துடன் செயல்பட்டது. ஆனால் தற்போது திமுக இணையதள அணி சில பின்னடைவுகளை சந்தித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் இப்போது இருந்தாவது இணையதள பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் அது மட்டும் இன்றி தற்போது வாட்ஸ் அப்பிலும் சேனலை உருவாக்கும் வசதி உள்ளதால் அதன் மூலம் மக்களை இன்னும் எளிதாக அணுகலாம் இப்படி பல வசதிகள் உள்ள நிலையில் இணையதள பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாமல் திமுகவின் ஐடி விங் ஆட்கள் பற்றாக்குறையால் ஆள் சேர்ப்பிற்கு விளம்பரப்படுத்தப்பட்டது..

மேலும் திமுகவிற்கு ஆதரவாக இணையதளங்களில் செயல்பட ஆட்கள் தயாராக இல்லை எனவும், திமுக இணையதள அணி என்றால் ஆட்கள் தெறித்து ஓடுகிறார்கள் எனவும் சில தகவல்கள் வெளியானது இதனால் முதல்வரை பார்க்கும் வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தினால் அதன் மூலமாவது ஐடி விங்கிற்கு ஆட்கள் சேருவார்கள் என்ற நோக்கில் அந்த விளம்பரம் திமுக இணையதள அணி மூலமாக செய்யப்பட்டது.இந்த நிலையில், முகநூல் நிறுவனம் முரசொலியின் அதிகாரப்பூர்வ பக்கத்தை நீக்கி உள்ளது. ஆதலால் இனி முரசொலியில் முகநூல் பக்கம் கிடையாது புதிதாக இனிமேல் தொடங்கினால் தான் உண்டு! என்ன செய்யப் போகிறார்களோ என இணையதள உடன்பிறப்புகள் புலம்பி வருகின்றனர்.மேலும் ஏற்கனவே முரசொலியின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டது இந்த நேரத்தில் தேர்தல் வருவதற்குள் மற்றுமொரு முகநூல் பக்கத்தை தயார் செய்து அதில் பிரச்சாரம் மேற்கொள்ளும் சமயத்தில் அதிலும் இதுபோன்ற ஹேக்கிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் என்ன செய்வது என அறிவாலய இணையதள பிரிவு கவலையில் இருப்பதாக வேறு சில தகவல்கள் கசிந்துள்ளது...