விசிகவை சேர்ந்த வன்னியரசு பேசிய பிரிவினைவாத பேச்சு தமிழக அரசியலில் எதிர்வினையை உண்டாக்கி வருகிறது, பல்வேறு நபர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இந்த சூழலில் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார், இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :
இந்தியாவிலிருந்து தமிழ்நாடு என்பது தனித்துவமான நாடு என்பதை அடைவது தான் அக்கட்சியின் கடமை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஒருவர் பேசியிருக்கிறார். இது போன்ற பிரிவினைவாத தீய சக்திகள் குறித்து நமக்கு கவலையில்லை. இந்தியாவை இனி பிரிக்க ஒருவன் இனி பிறக்க கூட முடியாது என்ற அளவில் நம் நாடு வல்லரசாகிக் கொண்டிருக்கிறது.
ஆனால், மேடைகளில் கூக்குரலிட்டு அரசியல் பிழைப்பை நடத்தி கொண்டிருப்பவர்களோடு கூட்டணி வைத்திருக்கும் ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் இது போன்ற பேச்சுகளை ஏற்று கொள்கிறதா என்பதையும், காங்கிரஸ் கட்சி இதை வழிமொழிகிறதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். அந்த கூட்டணியில் உள்ள இதர உதிரி கட்சிகள் (கம்மிகள் உட்பட) பிரிவினைவாத நோக்கம் கொண்டவை என்பதில் வியப்பில்லை.
ஏற்கனவே திராவிட நாடு பேசிய அண்ணாதுரை தலைமையிலான தி மு க அந்தர்பல்டி அடித்து தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டதை மறந்து விட வேண்டாம். பிரிவினைவாத தீய சக்திகளுக்கு ஆதரவு கொடுத்த திமுக அரசு இழந்தது என்ன என்பதை மனதில் கொள்ள வேண்டும் என நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். வன்னியரசு பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது