24 special

கதறப்போகும் சீனா..! இந்திய ராணுவம் மேற்கொள்ளும் நாராயணாஸ்திர பயிற்சி..!


இந்தியா : இந்திய சீன எல்லைப்பகுதியில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. மேலும் பாகிஸ்தானுடன் இணைந்து சாலைகளை அமைத்து வருகிறது. மேலும் கிழக்கு லடாக் பகுதிகளில் உட்கட்டமைப்பை பலப்படுத்திவருவதாக அமெரிக்கா தனது கவலையை நேற்று முன்தினம் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


கிழக்கு லடாக் பகுதியில் எல்லைக்கோட்டு பகுதியில் சீன ராணுவத்தின் தந்திர நடவடிக்கைகளை கண்காணிக்க இந்திய ராணுவம் பயிற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜூன் 7 அன்று மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மானியலங்களில் ஒரேநேரத்தில் நாராயணாஸ்திர பயிற்சியை மேற்கொண்டது. இந்த பயிற்சியானது எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களை ஒருங்கிணைத்து போர்க்களத்தில் செயல்படுவதாகும்.

இந்திய ராணுவ செய்திகளின்படி மேற்குவங்கத்தில் அமைந்துள்ள டீஸ்டா பயர் ரேஞ்சு மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள யோங்டி பீல்டு பயர் ரேஞ்சு ஆகிய இரு இடங்களிலும் மிகப்பெரிய பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுக்னாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் கிழக்கு பகுதிக்கான திரிசக்தி கார்ப்ஸ் இந்த ஒருங்கிணைந்த கூட்டுப்பயிற்சியை நடத்தியது. 

தற்போதுள்ள கட்டுப்பாடு மற்றும் கீழ்ப்படிதல் மற்றும் கட்டளை தகவல் தொடர்பு கட்டமைப்பை உறுதிப்படுத்துவது மற்றும் துப்பாக்கிசூடுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறையின் எல்லையோர தீவிர செயல்பாடுகள் ஒருங்கிணைந்த சூழலை உருவாக்கியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் டேட்டா பியூஷன் மற்றும் டெசிஷன் சப்போர்ட் சென்டரின் புதிய கருத்தாக்கம் இந்த பயிற்சின் மூல நிரூபிக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பயிற்சி நடவடிக்கையில் பல ராணுவத்தளபதிகள் ஈடுபட்டனர். மேலும் எல்லையோர கண்காணிப்பில் ஷூட்டர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சென்சார்கள் பயன்படுத்தும் முறையும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லையில் சீனாவை இந்த நாராயணஸ்த்திர வியூகம் மூலம் தீவிரமாக கண்காணிக்க முடியும் என இந்த பயிற்சி நிரூபித்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாராயணாஸ்திர பயிற்சியை திரிசக்தி கார்ப்பிசின் ஜெனரல் ஆபிசர் காமாண்டிங் லெப்டினென்ட் தருண்குமார் மற்றும் மற்ற மூத்த ராணுவ அதிகாரிகள் கண்காணித்தனர்.