கர்நாடகா : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDOவுடன் இணைந்து TASL (TATA ADVANCED SYSTEMS LIMITED) மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்கள் தயாரித்த ஆகாஷ் ஏர்போர்ஸ் லாஞ்சர் செவ்வாயன்று இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்டது. இந்த ஆகாஷ் ஏவுகணை வழங்கப்பட்ட 100ஆவது ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் அமைந்துள்ள TASLன் வெமகல் பெசிலிட்டியில் DRDO வின் டிஜிஎம்ஸ்எஸ் டைரக்டர் ஜெனரலான நாராயண மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல சிறுகுறு தொழில் நிறுவன பங்குதாரர்கள், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எல் அண்ட் டி மற்றும் ஏவுகணை தரக்காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
TASL இதுவரை 49 ஆகாஷ் லாஞ்சர்களை இதுவரை இந்திய ராணுவத்திற்கு வழங்கியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய TASL சிஇஓ சகரன் சிங் " உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட இந்த 100 ஆவது லாஞ்சர் இந்திய பாதுகாப்பு மற்றும் உற்பத்தித்துறையின் ஒரு முக்கிய மைல்கல். முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் லாஞ்சஹ்ரின் செயல்பாடுகள் முழு திருப்தி மற்றும் நம்பிக்கை அளித்துள்ளது" என கூறினார்.
எல் அண்ட் டி நிறுவன பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் டெக்னாலஜி இயக்குனர் ஜெயந்த் பாட்டீல் " எல் அண்ட் டி நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை நமது பாதுகாப்பு படைகளுக்கு வழங்குவதில் தனிக்கவனம் செலுத்திவருகிறது. இது பிரதமர் மோடியின் ஆத்ம நிற்பார் பாரத் தொலைநோக்கு பார்வைக்கு இந்திய தொழில்துறை முக்கிய பங்களித்துள்ளதை இது எடுத்துக்காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.