24 special

50 ஆண்டுகால பழைய டப்பாவை வாங்குகிறதா பாகிஸ்தான் விமானப்படை..?

Airforce
Airforce

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் பொருளாதாரம் கடும்வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து கூறிவரும் வேளையில் பாகிஸ்தான் அரசு வீண் செலவுகளில் கவனம் செலுத்துவதாக பாகிஸ்தான் மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் அமெரிக்காவையே  சார்ந்திருந்தது.


ஜோபிடென் அமெரிக்க அதிபரானால் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை கடைபிடிப்பார் என உலகநாடுகள் எதிர்பார்த்திருந்தன.

பாகிஸ்தான் அரசும் அதையே எதிர்ப்பார்த்திருந்தது. ஆனால் அமெரிக்கா சமீபகாலமாக இந்தியாவுடன் காட்டி வரும் நெருக்கம் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இது இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பிரதமர் மோடியின் அணுகுமுறைகளால் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளதாக உலக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் விமானப்படை அதிகம் அறியப்படாத சி-130H விமானத்தை கடற்படை போக்குவரத்தை மீண்டும் துவங்குவதற்காக வாங்கவுள்ளது. இது பெல்ஜிய விமானப்படையை சேர்ந்த விமானம் ஆகும். பெல்ஜியம் இந்த விமானங்களை 1973ல் பயன்படுத்தியது. 2021ல் பெல்ஜியம் தன்னிடம் மீதமிருந்த 10 விமானங்களையும் ஓய்வுகொடுத்து பியூவெச்சன் விமானதளத்தில் நிறுத்தி வைத்தது.

இந்த விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை வாங்க இருக்கிறது என கடந்த சிலநாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருந்தது. இந்த விமானங்களை வாங்கி கூடுதல் போக்குவரத்துப்படையை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள நிதிப்பற்றாக்குறை மற்றும் அரசியல் சூழல் காரணமாக புதிய விமானங்களை பாகிஸ்தான் வாங்கவில்லை என கருதப்படுகிறது.