தனியார் ஊடகம் ஒன்றில் அனைத்து சாதியினரும் அர்ஜகர் ஆகலாம் என்ற நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தீர்வா? சிக்கலா? என்ற ரீதியில் விவாதம் நடத்தப்பட்டது, இதில் நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவிற்கு தாவிய ராஜிவ் காந்தி கலந்து கொண்டார், மேலும் ஆன்மீக சொற்பொழிவாளர் சிந்துஜா கலந்து கொண்டு பேசினர்.
திமுகவை சேர்ந்த ராஜிவ் காந்தி நீண்ட நேரம் பேசினார் பல்வேறு வழிகளில் விமர்சனமும் செய்தார் இந்த சூழலில்தான் அவருக்கு எதிர்க்கருத்து தெரிவித்த சிந்துஜா ஒரே வார்த்தையை மட்டுமே மேற்கோள் காட்டி பேசினார், அனைத்து சாதியினரும் அர்ஜகர் ஆகலாம் என்ற தீர்ப்பு குறித்து பேசுகையில் மக்களுக்கு புரியும் விதமாக திமுகவில் கருணாநிதி அவருக்கு பிறகு ஸ்டாலின் அதற்கு பிறகு உதயநிதி என இசை வேளாளர் மட்டுமே பதவிக்கு வருவது போல் அல்ல என சிந்துஜா தெரிவிக்க...
அத்தனை நேரம் பேசிய ராஜிவ் காந்தி திடீர் பல்டி அடித்து இது மோசமான நரி தந்திர விமர்சனம் என்றெல்லாம் ஆவேசமடைந்து விட்டார், நெறியாளர் கார்த்திகேயன் இது ஒன்றும் மோசமான விமர்சனம் இல்லையே என கூற அதனை ராஜிவ் காந்தியால் தாங்கி கொள்ள முடியவில்லை இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ச்சியாக திமுகவினருக்கு அவர்கள் பாணியில் வலதுசாரி பார்வையாளர்கள் பதிலடி கொடுக்க தொடங்கி இருக்கின்றனர், முன்பு எல்லாம் திமுகவினர் பிராமணர்களை அவர்கள் சமூக பெயரை குறிப்பிட்டு விமர்சனம் செய்து வந்த சூழலில் தற்போது அதே பாணியில் திமுகவிற்கு எதிர் நிலைப்பாடு எடுத்த தரப்பும் பதிலடி கொடுக்க துணிந்து விட்டது.
வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.