24 special

அக்னிபத் திட்டமல்ல.. இனி என்ன? ஒரே பதிவில் போட்டு தாக்கிய ஆசிரியர் !

Rajnath singh
Rajnath singh

ஆசிரியர் பெரியசாமி தங்கவேல் தனது அனுபவம் குறித்தும் அக்னிபத் திட்டம் குறித்தும் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-அக்னிபத் திட்டமல்ல! திருப்புமுனை!


இந்திய ராணுவத்தால் மூன்று மாதங்கள் Officers Training Academy (OTA), Nagpur ல் பயிற்சி கொடுக்கப்பட்டவன் என்ற பெருமையோடும் உரிமையிலும் இந்த பதிவை எழுதுகிறேன்.

அக்னிபத் என்ற ராணுவ வேலைவாய்ப்பு மூலம் ஏற்படும் சாதகங்களை பற்றி பல பதிவுகள் எழுதி விட்டதால் அதைப்பற்றி நான் எழுதப்போவதில்லை ஆனால் இந்திய ராணுவ பயிற்சியினால் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய பயிற்சிகள் என்ன ஏன் இந்த ஒண்ணரை அணா கட்சிகள் அலறுகிறார்கள் என்று எழுதப் போகிறேன்.

முதலில் இந்திய ராணுவ பயிற்சியினால் கிடைக்கக்கூடிய விஷயங்கள் என்ன 1. இந்திய ராணுவத்தில் சுய ஒழுக்கமே முதல் பயிற்சியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது

2. உடலை கட்டுக்கோப்பாகவும் மனதை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வீரர்களை தயார்படுத்துவது தான் சுய ஒழுக்க பயிற்சி. 3. இந்தப் பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள் சில அற்ப லாபங்களுக்காக எப்பொழுதுமே தன்னுடைய தேசத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். நீதி நியாயத்தில் இருந்து வழுவ  மாட்டார்கள்.

4. மற்ற எல்லா விஷயங்களையும் விட தேசமே பெரிது என்று கற்றுக் கொடுக்கப்படும். 5. சாதி, மத, மொழி பேதமின்றி அனைத்து இந்தியர்களையும் சகோதரர்களாக பார்ப்பார்கள். 6. பணம் கொடுத்து இவர்களை விலைக்கு வாங்க முடியாது. 

7. இப்படிப் பயிற்சி பெற்றவர்கள் தேசத்தை மதிக்காதவர்களை தேச துரோகம் செய்பவர்களை அவர்கள் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் தங்கள் முடிக்கு சமமாக கூட மதிக்க மாட்டார்கள் இப்பொழுது விசயத்திற்கு வருவோம் ஒண்ணரை அணா கட்சிகள் ஏன் இவ்வளவு பதறுகிறார்கள்

1. இந்தக் கட்சிகள் தேசத்துரோக செயல்கள் செய்யாமல் அரசியல் செய்ய முடியுமா?? 2. சாதி மத மொழி மோதல்களை ஏற்படுத்தாமல் இவர்களால் கட்சி நடத்த முடியுமா?? 3. பணத்தைக் கொடுத்து ஓட்டுக்களை பெறாமல் கொள்கைக்காக ஓட்டுகளை பெற முடியுமா??

4. இப்பொழுது உள்ள இந்தியாவின் இரண்டாவது ராணுவத்தையே இவர்களால் சமாளிக்க முடியவில்லையே ஒவ்வொரு வருடமும் 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் உருவாகிக்கொண்டே இருந்தால் எப்படி சமாளிக்க முடியும்??  5. அதுவும் அவர்கள் ராணுவத்தில் இல்லாமல் பொது வாழ்க்கையில் ராணுவ கட்டுப்பாட்டை கடைபிடித்தால் இவர்கள் பிழைப்பு எப்படி ஓடும்??

6. கொள்கையே இல்லாமல் பணத்தை கொடுத்து ஓட்டு பெற்றுக் கொண்டிருக்கும் இவர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?? 7. இல்லாத கொள்கையை எங்கு தேடுவது?? இந்தியாவில் இல்லை என்றால் வெளிநாட்டில் பிச்சை எடுத்து கூட பிழைக்க முடியாது! என்ன செய்வார்கள்?? 

8. அவர்களின் வெளிநாட்டு முதலாளிகளுக்கு என்ன பதில் கூறுவார்கள்??எனவே இளைஞர்களே! நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். இது ஒரு திட்டம் அல்ல உங்கள் வாழ்வின் திருப்புமுனை இதில் சேர்ந்து சுய ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் வாழ்க்கையில் எந்த உயரத்திற்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் என குறிப்பிட்டுள்ளார்.