24 special

இனி சரவெடிதான்..! அசத்தப்போகும் அப்பாச்சி..!

indian military
indian military

புதுதில்லி : இந்திய அரசு நமது இராணுவத்திற்காக ஆறு போயிங் AH -64E தாக்குதல் ரக ஹெலிகாப்டர்களை கடந்த 2020ல் ஆர்டர்களை வழங்கியிருந்தது. மேலும் இந்த வருடம் டிசம்பருக்குள் ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பயிற்சியை மேற்கொள்ள இந்திய பாதுகாப்பு படை வீரர்களை அமெரிக்காவுக்கு அனுப்ப உள்ளது.


2023ல் இந்தியாவிற்கு போயிங் நிறுவனத்திடமிருந்து லோப் வகை ஹெலிகாப்டர்களை இறக்குமதிசெய்ய தொடங்க உள்ளது. இதனால் இந்திய இராணுவத்தின் ஏவியேஷன் கார்ப்ஸ் பைலட் மற்றும் தரைப்படையினர்களை ஒவ்வொரு குழுவாக அமெரிக்காவிற்கு பயிற்சிக்காக அனுப்ப இருக்கிறது. AH -64E ஹெலிகாப்டர்கள் AAC (ஏவியேஷன் கார்ப்ஸ் )க்கு வழங்கப்பட உள்ளது. 

இந்த ஹெலிகாப்டர்கள் ஹைதராபாத்தில் அமைந்துள்ள டாடா போயிங் ஏரோஸ்பேஸ் லிமிடெட் ஆல் உருவாக்கப்பட்ட மேட் இன் இந்தியா ப்யூஸ்லேஜை கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. மேசா AZ போயிங்கின் AH -64E யூனிட் இந்திய ராணுவத்திற்கான முதல் அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டரை தயாரிக்க உள்ளது.

அதேபோல ஏவியேஷன் கார்ப்ஸ் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் HAL ஆல் தயாரிக்கப்பட்ட லைட் காம்பாட் ரக ஹெலிஹாப்டரையும் வாங்கவுள்ளது. மேலும் ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக இந்திய ராணுவம் 180 AGM-114எல்3 ஹெல் பயர் ஏவுகணைகள், 90 AGM எல்3 II ஹெல் பயர் ஏவுகணைகள் மற்றும் 200 ஸ்டிங்கர் மேலும் 300 மீமீ பீரங்கிகளுக்கான வெடிமருந்துகளையும் பெறவுள்ளது.

அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் அண்டைநாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் வேளையில் இந்தியாவின் ஆயுத அதிகரிப்பு இந்தியாவை பலப்படுத்தும் என கருதபப்டுகிறது.