
மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதல் இந்தியர்களின் நினைவில் இன்னும் அழியாத காயமாக உள்ளது. அந்த தாக்குதலில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியாவின் இதயத்தை குலுக்கிய அந்த நிகழ்வுக்குப் பின், அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உடனடியாக பாகிஸ்தானை எதிர்த்து இராணுவ நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இப்போது, அந்த முடிவுக்கான உண்மையை முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சர் பி. சிதம்பரம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:“மும்பை தாக்குதலுக்குப் பின் நிச்சயம் நாங்கள் பாகிஸ்தானை எதிர்த்து கடும் நடவடிக்கை எடுக்க எண்ணினோம். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கடுமையான அழுத்தம் காரணமாகவே அந்த முடிவு தடுக்கப்பட்டது. சர்வதேச சூழலில் இந்தியா அப்போது சிக்கலான நிலையை எதிர்கொண்டது. அந்த அழுத்தத்தின் கீழ் தான் இந்தியா அமைதியைத் தேர்ந்தெடுத்தது” என்று விளக்கமளித்தார்.
சிதம்பரத்தின் இந்த வார்த்தைகள் இன்று அரசியல் சூழலில் காங்கிரஸுக்கே எதிராகப்மாறியுள்ளது .
பாஜக தரப்பு உடனடியாக, “மோடி அரசு இருந்திருந்தால் பாகிஸ்தானை அன்றே பாடம் கற்றுத்திருக்கும். புல்வாமா, உரி தாக்குதல்களுக்கு எப்படிச் ச surgical strike, Balakot airstrike நடந்ததோ அதே போல பதிலடி கொடுத்திருக்கும்” என பதிலடி கொடுத்துள்ளது.
தற்போது மக்கள் மனதில் “அமெரிக்காவின் சொல்லைக்கேட்டு காங்கிரஸ் அரசு இந்தியாவின் தனதுகடமையை செய்ய தவறியதா என்ற கேள்விகள் உருவாகி உள்ளது.சிதம்பரம் கூறியதன் மூலம், காங்கிரஸ் அரசு அப்போது துணிவில்லாமல், வெளிநாட்டு அழுத்தத்தின் கீழ் மட்டும் செயல்பட்டது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும்“மோடி போன்ற தலைவர் இருந்தால் பாகிஸ்தான் அன்றே பாடம் கற்றுக் கொண்டிருக்கும்; காங்கிரஸின் பலவீனத்தால் தான் இந்தியா பல தாக்குதல்களைத் தாங்க வேண்டியதாயிற்று. தற்போது வரை அடிக்கடி காஷ்மீர் மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் இதற்கு எல்லாம் காரணம் காங்கிரஸ் தான் என போட்டுடைத்துள்ளார் சிதம்பரம் இது காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. மோடி அரசின் அதிரடி நடவடிக்கைகளை மக்கள் ஒப்பிட்டு பார்க்கும் சூழலில், இந்த வெளிப்பாடு காங்கிரஸின் பலவீனத்தை மேலும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
ஏற்கனவே பயங்கரவாத குற்றச்செயல்களில் திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கின் வாக்குமூலம் அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்தவர் யாசின் மாலிக் கடந்த 1977-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற தீவிரவாத அமைப்பை அவர் தொடங்கினார். பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார்.
கடந்த 1989-ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையதுவின் மகள் ரூபியாவை கடத்தினார். கடந்த 1990-ம் ஆண்டு ஸ்ரீநகரில் ஜேகேஎல்எப் நடத்திய தாக்குதலில் 4 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கிடையே யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தேசிய புலனாய்வு முகமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக யாசின் மாலிக் தரப்பில் தாக்கல் செய்துள்ள 85 பக்க பிரமாணப்பத்திரத்தில், முந்தைய காங்கிரஸ் அரசு காஷ்மீர் தொடர்பான திரைமறைவு அமைதி பேச்சுவார்த்தைகளுக்காக தன்னை பயன்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின் பேரிலேயே கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்தை சந்தித்ததாகவும், பாகிஸ்தானில் இருந்து திரும்பியதும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததாகவும் கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு நேரில் நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுவும் தற்போது பேசுபொருளாகி உள்ளது!