
“உலகம் இன்று தகவல் தொழில்நுட்பத்தையே நம்பி இயங்குகிறது… ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு துறையும் டெக்னாலஜியை நம்பித்தான் தற்போதைய உலகம் ஓடுகிறது. இந்த உலகளவிய தொழில்நுட்பப் புரட்சியின் மத்தியில் ஒரு நாடு மட்டும் டெக்னலாஜியில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அந்த நாடு இந்தியா தான்.”உலகம் இன்று ஒரு விஷயத்தை தெளிவாக உணர்ந்து விட்டது…தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் இந்தியா என்று ! இதனை தொடர்ந்து தான் தொழில்நுட்பத்தின் ராஜாக்களான மைக்ரோ சாப்ட் ,கூகிள், என பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து இந்தியாவுக்கு தொழில்தொடங்க வருகிறார்கள். பில்லியன் பில்லியனாக முதலீடுகளை குவித்து வருகிறார்கள். இதன் மூலம் இந்தியாவில் புதிய ஆற்றல் உருவாகி உள்ளது..
செயற்கை நுண்ணறிவு, தரவுமையங்கள், சிப் உற்பத்தி… என ஒவ்வொரு துறையிலும் இந்தியா தன் இடத்தை நிரூபித்து வருகிறது. இளைஞர்களின் திறமை வலுவான மோடியின் ஆட்சித்திறன் சேர்ந்து இந்தியாவை உலகின் டிஜிட்டல் தலைநகரமாக மாற்றுகிறது.இதற்கிடையில் ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டை இந்தியாவில்செய்கிறது . ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஆந்திராவில் பிரமாண்டமாக முதலீடு செய்ய உள்ள நிலையில், அடுத்ததாக மைக்ரோசாப்ட்டும் களமிறங்கியுள்ளது.. உலகின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அடுத்தடுத்து இந்தியாவில் முதலீட்டை அறிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மைக்ரோசாப்ட். தகவல் தொழில் நுட்ப துறையில் உலக அளவில் பெரும் ஜாம்பவான் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா உள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர். இவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆசியாவிலெயே பெரிய முதலீடாக ரூ. 1.5 லட்சம் கோடி முதலீட்டை இந்தியாவில் செய்ய முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் முடிவு என்ற தகவலை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு துறை மேம்பாடு மற்றும் திறன் ஆகிய துறையை நோக்கி இந்த முதலீடு இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். இதற்கு சத்ய நாதெல்லா நன்றிகளை தெரிவித்து கொண்டார்.. சத்ய நாதெல்லாவின் இந்த பதிவுக்கு பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- சத்ய நாதெல்லாவுடன் ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசனை நடைபெற்றது. ஆசியாவில் மிகப்பெரிய முதலீட்டை மைக்ரோசாப்ட் இந்தியாவில் செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவின் புதுமை மற்றும் திறன் கொண்ட இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் தனது மிகப்பெரிய தரவு மையத்தை இந்தியாவில் அமைக்க முடிவு செய்து 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்தது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகுளின் தரவு மையம் அமைய உள்ளது.அமேசான் நிறுவனமும், இந்தியாவில் தரவு மையம் அமைக்க பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. சிப் உற்பத்தி செய்யும் Qualcomm நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியோனோ ஆர். அமோனை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் ஏஐ தொழில் நுட்பத்தின் மேம்பாடு மற்றும் புதுமை திறன் ஆகியவை தொடர்பாக இருவரும் ஆலோசித்து இருந்தனர். என்பது குறிப்படத்தக்கது
