24 special

ஓ..! இதுதான் திராவிட மாடலா? தந்தி டிவியை மென்ஷன் செய்து H.ராஜா..சரமாரி கேள்வி !

H.raja
H.raja

சமீப காலமாக திமுகவால் நியமிக்கப்பட்ட பல்வேறு நபர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர், இதில் மூவரை குறிப்பிட்டு பிரபல தனியார் ஊடகமான தந்தி டிவி யை மென்ஷன் செய்து கேள்வி எழுப்பியுள்ளார் பாஜகவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் H. ராஜா இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :-


எது திராவிட மாடல் ஆபாசமாக பெண்களை பேசும் லியோனி பாடநூல் நிறுவன தலைவர். திருமணம் கடந்த உறவு ஸ்பெஷலிஸ்ட் சுப.வி பாடநூல் நிறுவன ஆலோசகர். கதவை தாளிட்டு பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட ஜாகிர் உசைன் முதல்வருடன் துபாயில். இந்த கீழ்த்தரமான மாடல் தமிழகத்திற்கு தேவையில்லை @ThanthiTV என குறிப்பிட்டுள்ளார் H.ராஜா.

பாட நூல் கழக தலைவராக நியமிக்கப்பட்ட லியோனி பெண்கள் இடுப்பு குறித்து பேசி கடும் சர்ச்சையில் அவரை பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி என்பவர் சுப. வீரபாண்டியன் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார், திருமணம் கடந்த உறவு என கூறி பல்வேறு பெண்களிடம் சுப.வீரபாண்டியன் தவறாக நடந்து கொள்வதாக பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார் தமிழச்சி.

ஜாஹிர் ஹுசைன் மீது பல்வேறு இசை மற்றும் நடன கல்லூரி ஆசிரியர்கள் குற்றசாட்டு சுமத்தி வருகின்றனர், சமீபத்தில் கரூரை சேர்ந்த ஆசிரியை ஒருவர், ஜாஹிர் ஹுசைன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சாகும் நிலைக்கு தான் தள்ளப்பட்டதாகவும், உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதம் அனுப்பி இருந்தார்.

இப்படி பல்வேறு பாலியல் குற்றசாட்டுகளில் சிக்கும் நபர்களுக்கு அரசில் பல்வேறு பொறுப்புகள் வழங்குவதுதான் திராவிட மாடலா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வரும் நிலையை அதனை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான H. ராஜாவும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.