24 special

அன்று தேமுதிக...இன்று நா.த.க...எடப்பாடி போடும் பிளான்!

seeman, edapadi
seeman, edapadi

கடந்த மாதம் பாஜக கூட்டினியில் இருந்து வெளியான அதிமுக தற்போது லோக்சபா தேர்தலை எதிர்கொவது குறித்து தீவிரமாக புதிய கூட்டணியை இணைக்க ஆலோசித்து வருகிறார் எடப்பாடி. அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த தோழமை கட்சிகளான பாமக,  தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு புதிதாக மெகா கூட்டணியை அமைக்க அவர் முடிவு செய்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடைபெற்று வருகிறதாம். தற்போது இருக்கும் கூட்டணி கட்சிகள் தேர்தல் நேரத்தில் தான் தங்கள்து கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று தெரிவித்தனர். 


இந்நிலையில் அதிமுக கூட்டணியில் ஒரு பிரியா கட்சியைஇணைத்து பக்க பலமாக இருக்க வேண்டும் என்று எண்ணி, சீமானின் நாம் தமிழர் கட்சியை சேர்ப்பதற்கு அதிமுக முக்கிய தலைவர்கள் பேசி வருகிறாராம். ஏற்கனவே ரகசிய பேச்சுவார்த்தை சீமானுடன் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சீமான் பேசுகையில் "எங்களுக்கு கூட்டணி அழைப்பு வந்தது உண்மை தான் என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில் தனித்து போட்டியிடும் முடிவில் உறுதியாகவே இருக்கிறோம். ஆனால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிவித்தார். இப்படி இவர் இருபக்கமும் சாதகமாக பேசுகையில் தேர்தல் நேரத்தில் முடிவை எப்படி வேணாலும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையில் சீமான்  நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது. அவர் இதுவரை சந்தித்த அனைத்து தேர்தலிலும் தனித்து தான் போட்டியிட்டார். எந்த கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது கிடையாது. தோல்வியை சந்தித்து வந்தாலும்அவருக்கு தற்போது வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை அதிமுக அறிந்து கொண்டு சீமானை தமது பக்கம் இழுக்க முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 3-வது இடம் கிடைத்தது. 170-க்கும் அதிகமான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்திமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதித்திருந்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வெற்றியும் பெற்றிருந்தனர். இப்படி நாம் தமிழர் கட்சி வளர்ச்சியடைந்த நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கணிசமாக வாக்கு அதிகரிப்பதாக கணித்து அதிமுக தன வசம் இழுக்க தீவிரமாக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியினர் ஒருபக்கம் கூட்டணி தொடரலாம் என்றும், மறுபக்கம் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆனாலும் கூட்டணி முடிவு குறித்து சீமான் தான் எடுப்பார் என்று கருதப்படுகிறது. முன்னதாக நாடாளுமன்ற தேத்தலில் தனித்து போட்டியிட போவதாக அவர் தெரிவித்திருந்தார்.2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை சேர்த்து ஜெயலலிதா வெற்றி பெற்றார். அதே பாணியில் தற்போது சீமானை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் வெற்றி பெற்று விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டிருப்பதாக அதிமுகவினர் எண்ணுகிறார். பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் ஒரு சில மாதங்களில் தெரியவரும்.