லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் "லியோ" இந்த படம் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் நீதிமன்றம் படத்தினை வெளியிட தடை விதித்துள்ளது. லியோ படத்திற்கான ஆடியோ வெளியிட்டு விழாவின் தடையை தொடர்ந்து தற்போது சிறப்பு காட்சி 4மணிக்கு வெளியிட தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் நீதிமன்றத்தில் புகார் கோரினர். அதன் விசாரணை இன்று வரவுள்ளது. தொடர்ந்து விஜயின் படத்திற்கு திமுக அரசு தடையை மறுத்து வரும் நிலையில் விஜய் ரசிகரக்ள் கடும் கோபத்தில் உள்ளனர்.இதற்கிடையில் நடிகர் விஜயைப் பார்த்து ஆளும் திமுக அரசு பயப்படுகின்றது. அதனாலேயே அவரது லியோ படத்துக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை திமுக அரசு விதித்துள்ளது" என முன்னாள் அமைச்சரும் அதிமுக முக்கியப் பிரமுகருமான கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
திரைத்துறையை திமுக அரசு முடக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, "திரையுலகம் திமுக அரசின் நட்பு உலகம். திரைத்துறையை திமுக அரசு ஒருபோதும் முடக்காது. திமுக அரசினால்தான் திரைத்துறை செழிப்பாக இருக்கிறது என்பதே உண்மை. நலிந்த தயாரிப்பாளர்களைக் கூட திமுக அரசு ஊக்குவிக்கிறது. சினிமா விவகாரத்தில் அரசு எப்போதும் தலையிட்டதே இல்லை. லியோ சர்ச்சையைப் பொறுத்தவரை நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாலை 4 மணி காட்சிக்கு அரசு அனுமதியளிக்கும்" என்றார்,
முன்னதாக படக்குழு தரப்பிலிருந்து ’லியோ’ படத்தின் முதல் காட்சியை, அக். 19-ம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20-ம் தேதியில் இருந்து 24 -ம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.தமிழக அரசு ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக சில அறிவுரைகளை வழங்கியது. அதன்படி 19-ம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியது. அரசு உத்தரவில், ’அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. லியோ திரைப்படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சியை திரையிட அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது. இந்தச் சூழலில், நீதிமன்றம் உத்தரவிட்டால் 'லியோ' 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அதில் 4மணிக்கு வெளியிட தடை விதித்துள்ளது நீதிமன்றம். அதேசமயம், காலை 7மணி முதல் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்யும் என்று உத்தரவிட்டுள்ளது. திமுக அமைச்சரோ அனுமதி நீதிமன்றம் தான் அளிக்க வேண்டும் என்று கூறினார். இப்போது நீதிமன்றமோ அரசிடம் கோரிக்கை வைக்க கூறியுள்ளது ரசிகர்களிடம் கோவத்தை அதிகரித்துள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் இப்படி போன்ற இழுபறிக்கு ரசிகர்கள் மத்தியில் திமுக அரசின் மீதான கோவத்தை மேலும் அதிகரித்துள்ளது. நீங்களே தடையை விதித்து விட்டு இப்போது நீதிமன்றம் அனுமதி கொடுக்கும் என்பது எந்த விதத்தில் நியாயம். என்று சமூக தளத்தில் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.