தமிழக பாஜகவிற்கு 2024- ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு தயாராக கோரி டெல்லியில் இருந்து அக்கட்சி தலைமை உத்தரவிட்டு இருந்த சூழலில் நேற்று கோவையில் நடைபெற்ற சம்பவம் ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் ஆதரவு இயக்கங்கள் தூக்கத்தை கெடுத்துள்ளது.
பிரதமர் மோடி செஸ் ஒலிப்பியாட் போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வந்தபோது மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் பிரதமரை சந்தித்தனர் அப்போது மாநிலத்தில் நடைபெறும் விதி மீரல்கள் மக்கள் போராட்டம் போன்றவற்றில் நேரடியாக களம் இறங்க பிரதமர் அறிவுறுத்தி இருந்ததாக நமது TNNEWS24-ல் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்த சூழலில் தமிழக பாஜக காந்தி வழியை விடுத்து நேதாஜி வழியில் களம் இறங்கி இருப்பது தெரியவந்துள்ளது, கோவை மாநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு போக்குவரத்து முடங்கியது, அனைத்து கட்சியினரையும் பேனர் ஒட்ட கூடாது என்ற மாவட்ட நிர்வாகம் எப்படி திமுகவினரை மட்டும் பேனர் ஒட்ட அனுமதிக்கலாம் ஒன்று அவர்கள் பேனரை எடுங்கள் இல்லை நாங்களும் போஸ்டர் ஒட்டுவோம் என கறாராக தெரிவித்தனர்.
வெளிப்படையாக பார்த்தால் சாதாரண நிகழ்வு போன்று தோன்றினாலும் கோவையில் பாஜக திமுகவிற்கு கடும் சிம்ம சொப்பனமாக விளங்குவதை இது வெளிப்படுத்தி இருக்கிறது, பாஜக மாவட்ட தலைவர்கள் ஒன்று இணைந்து ஆளும் கட்சியின் அதிகார வர்க்கத்தை அடித்து நொறுக்கியுள்ளனர் என்றே கூறலாம்.
பிரதமர் மோடி மாவட்ட ரீதியாக பூத் வாரியாக பாஜகவை பல படுத்தவும், அமைதியான முறையில் இல்லாமல் ஆளும் கட்சி அதிரும் வகையில் போராட்டத்தை முன்னெடுக்க உத்தரவிட்டு சென்றதாக கூறப்படும் நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் மாவட்ட. தலைவர்களுக்கு நேரடியாக உத்தரவிட்டு இருக்கிறாராம்.
மாநில அரசை பற்றியோ கைது நடவடிக்கை பற்றியோ கவலை வேண்டாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம், கட்சி உங்கள் பின்னால் இருக்கும் திமுகவின் அதிகார விதி மீறல்களை மக்களிடம் கொண்டு செல்வோம் என கூறி இருக்கிறார்.
இந்த சூழலில் தான் கோவையில் போஸ்டர் யுத்தம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, ஆளும் கட்சியாக இருந்தும் ஒரு போஸ்டர் கூட ஒட்ட முடியாமல் போகிறதே என்ற கவலையில் அதிர்ந்து இருக்கிறதாம் கோவை திமுக வட்டாரம். இனி காந்தி வழியில் மட்டும் இல்லாமல் நேதாஜி வழியில் களம் இறங்க தமிழக பாஜக முடிவு எடுத்து இருக்கிறதாம்
அடுத்த வீடியோவில் டெல்லியில் இருந்து தமிழக பாஜகவிற்கு கொடுத்த இரண்டு முக்கிய உத்தரவுகள் சினிமா துறை உட்பட என்ன என்பதை பார்க்கலாம் மறக்காமல் TNNEWS24 டிஜிட்டல் பக்கத்தை FOLLOW செய்து கொள்ளவும்.