
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா மே 7 அன்று பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நான்கு நாள் திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது, இந்தியா, பாகிஸ்தானின் முக்கிய ராணுவத் தளங்கள், விமான நிலையங்களை தாக்கியாதாகவும், இந்தியா தரப்பில் சேதத்தை சந்தித்ததற்கான ஆதரங்கள் கிடைக்கவில்லை என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
.குறிப்பாக எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் பல்வேறு விமான தளங்களும் தாக்கி அழிக்கப்பட்டன.ஆனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இந்தியாவின் விமானங்களை தான் தாக்கி விட்டோம் என பாகிஸ்தான் சொல்லி வந்தது. பாகிஸ்தானின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் இந்தியாவின் முக்கிய ராணுவத் தளங்கள், விமான நிலையங்களை தாக்கியாதாகவும், இந்தியா தரப்பில் பலத்த சேதத்தை சந்தித்ததாகவும் பாக்கிஸ்தான் தெரிவித்தது.
சவுதி ஈரான் ஊடகமும் இதே செய்தியை சொல்லி வந்தன. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. உண்மையில் இந்தியாவின் துல்லிய தாக்குதலால் பாகிஸ்தானின் போலாரி விமானத் தளம், நூர் கான் விமான தளம், ராவல்பிண்டி விமான தளம் பலத்த சேதத்தை சந்தித்தது.
மே 12 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் ஆராய்ந்தால் இந்திய தாக்குதலால் பாகிஸ்தானின் ராணுவத் தளங்களில் ஏற்பட்ட சேதம் தெளிவாக காணப்படுகிறது. இந்தியா நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானின் முக்கிய விமான நிலையங்களான போலாரி, நூர் கான் மற்றும் சர்கோதா ஆகியவற்றில் இந்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதம் மிக அதிகமாக இருந்ததாகவும், குறிப்பாக நூர் கான் விமான நிலையம், பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுதத்தை பாதுகாக்கும் தளத்திற்கு அருகில் இருப்பதால் மிகவும் இலகுவான இலக்காக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் இந்தியாவின் உதம்பூர் விமானத் தளத்தை தாக்கி சேதப்படுத்தியதாக கூறினாலும், மே 12 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் அங்கு சேதம் எதுவும் காணப்படவில்லை. அதே நேரத்தில், இந்தியாவின் தாக்குதல்கள் இலக்குகளை துல்லியமாகப் கண்டறிந்து மிகச் சரியாக நிகழ்த்தப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. நான்கு நாள் நடந்த மோதலில் இந்தியா தாக்குதல்களை திட்டமிட்டு, பாகிஸ்தானின் முக்கிய ராணுவப் பகுதிகளுக்கு நேரடி சேதத்தை ஏற்படுத்தியதாகவும், இது பாகிஸ்தான் சொன்ன சேத அளவை விட மிகப்பெரியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸின் இந்த அறிக்கை மூலம், இந்தியா நடத்திய தாக்குதல்களால், பாகிஸ்தானின் விமானப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் முக்கியமான விமானத் தளங்களின் பாதுகாப்பு குறைபாடுகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளதோடு, உலக அளவில் இந்தியாவின் போர் திறன் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருந்த போதிலும், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ராணுவ பலம் இருந்த போதும் கூட பாகிஸ்தானால் இந்திய முக்கிய ராணுவ தளங்களை வெற்றிகரமாக தாக்க முடியவில்லை அதற்க்கு முக்கிய காரணமும் உண்டு ஐஎன்எஸ் விக்ராந்த் தலைமையில் சுமார் 36 போர்க்கப்பல்கள் கராச்சியை டார்கெட் வைத்திருந்தது, பாகிஸ்தான் ஓவராக போயிருந்தால், கராச்சி நொறுக்கப்பட்டிருக்கும். அதோடு அதன் பொருளாதார நகர்வு முடிவு பெற்றிருக்கும்
இப்படி இந்தியா ரவுண்டு கட்டியதை உணர்ந்த பாகிஸ்தான், தீவிர எதிர்ப்பு காட்டாமல் அடக்கி வாசித்ததற்கு இந்திய கடற்படையின் மாஸ்டர் மூவும்தான் ஒரு காரணம்.பாகிஸ்தானின் போர் விமானங்கள், ராணுவ நிலைகள் ஆகியவை தாக்கப்பட்டதாக பரவலான ஊடகங்களால் கூறப்படுகிறது. ஆனால் செயற்கைகோள் ஆய்வின்படி இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது என்பதே உண்மை