24 special

மக்களே உஷார் ..! செயலி மூலம் லோன் வாங்கினால் "ரேப்பிஸ்ட்"..! திக் திக் தகவல்!

Loan
Loan

அரசியல் அட்டூழியங்கள், சினிமா கிசு கிசு கேட்டு ஜொள்ளு விடுவது, நடிகைக்கு லைக்குகள் போடுவது, ஊர் கதை ஊராமூட்டு கதை எல்லாம் நிறுத்திவிட்டு ஒரே ஒரு நிமிடம் இந்த வீடியோவை கேளுங்க....


பணம் என்றால் பிணம் கூட வாய் திறக்கும் என்பார்கள். அதே பணத்தை இன்று சில செயலிகள் மூலம்   பெற்று நடைப்பிணமாக நிறைய பேர் அலைகின்றனர். அவ்வளவு ஏன் தற்கொலை கூட செய்துக்கொள்கின்றனர் பலர். 

அவசர ஆத்திரத்திக்கு யாருடா நமக்கு பணம் தர போறாங்க.. இருக்கவே இருக்கு சில செயலி என மக்கள்  மத்தியில் படு வேகமாக பரவும் மன உளைச்சல் உயிர்கொல்லி செய்தி தான் "செயலி" மூலம் ஒரு லட்சம் மற்றும் அதற்கும் அதிகமானஅளவில் பணத்தை கடனாக பெரும் வழி. அதற்கு செய்ய வேண்டியது என்ன ?ஆதார் கார்டு மற்றும் ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பினால் போதும். அதற்கு முன்னதாக, செயலியை பதிவிறக்கம் செய்யும் போது கேட்கப்படும் அனைத்திற்கும் allow பட்டன் அழுத்துவோம் அல்லவா. allow பட்டன் அழுத்தினால் தான் அந்த செயலி மூலம் பணம் பெறவும் முடியும். அப்படி allow பட்டன் அழுத்துவதில் மாட்டிக்கொள்வது தான்...நம் contact லிஸ்ட் மற்றும் புகைப்படங்கள்.



கேட்கப்படும் கேள்விகளுக்கு விவரம் அளித்தபின், தங்கள் வங்கி எண்ணிற்கு பணம் வந்து சேர்ந்த உடன்.. 5 ஆயிரம் 10 ஆயிரம் என சீன் போடும் நிலைமை மாறி... ஒரு லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் உள்ளது என்ற மகிழ்ச்சியில் மனதில் பட்டாம்பூச்சி பறக்கும். அதன் பிறகு தான் பெரிய வேட்டு இருக்கு.

பணத்தை வாங்கும் போது இருக்கும் ஆர்வம் அதனை திருப்பி செலுத்துவதில் சற்று குறைவு தான் நம் மக்களுக்கு. ஒரு லட்சம் கடனாக பெற்ற தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் தினமும் 1000 ரூபாய் என்ற கணக்கில் செலுத்த வேண்டும். ஒரு நாள் தவறினாலும், மறுநாள் அதற்கு கூடுதலான வட்டி.. அதாவது 1 சதவீத வட்டி விகிதத்தில் கொடுத்திருக்கும் போது, ஒரு நாள் கட்ட தவறினாலும் வட்டி விகிதம் 2 சதவீதமோ அல்லது 3 சதவீதமாக உயரும்.

 அப்படியும் கட்ட தவறினால் பணம் கொடுத்த செயலியை சேர்ந்தவர்கள்... முதலில் போன் செய்வார்கள். அதற்கு சரியான பதில் இல்லை என்றால், நம் மொபைல் போனில் அண்ணா என்று பெயர் save செய்து வைத்திருந்தால், அந்த அண்ணாவிற்கே செல்கிறது போன் கால். நீங்கள் அவரின் அண்ணாதானே.. எங்களிடம் கடன் பெற்று இருக்கார் உங்கள் தம்பி. நீங்கள் தான் பணம் கட்ட வேண்டும் என்பார்கள். கணவர் என save செய்து இருந்தால் கணவருக்கும் போன் பறக்கும். 

அடுத்ததாக... காண்டாக்ட் லிஸ்டில் இருக்கக்கூடிய பலருக்கும் நேரடி போன் செல்லும். அப்போதும் கட்ட தவறினால்... நீங்கள் எடுத்து அனுப்பின செல்பி புகைப்படத்தையோ அல்லது ஏற்கனவே மொபைல் போனில், நாம் அழகாக ஹீ ஹீ என்றும், சோகமான முகத்தை வைத்துக்கொண்டும் சில சேஷ்டைகள் செய்வோம் அல்லவா? அதில், அவர்கள் கொடுக்கப்படும் பட்டத்திற்கு ஏற்றவாறு புகைப்படத்தை தேர்வு செய்து நெற்றி பொட்டில் "rapist " "தேடப்படும் குற்றவாளி" என அந்த புகைப்படத்தில் எடிட் மூலம் பதிவிட்டு, ஆதார் கார்டையும் சேர்த்து, அந்த நபரின் மொபைல் போனில் உள்ள அனைத்து contact நபர்களும் அனுப்புகின்றனர்.

இதனை பார்க்கும் அந்த நபருக்கு வேண்டப்பட்டவர்கள், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் எப்படி இதை கேட்பது ? யாரிடம் இதை சொல்வது என விஷயம் தெரியாமல் பயப்பட செய்கின்றனர். பிறகு ஒவ்வொருவராக போன் செய்து கேட்கும் போது தான் இது குறித்த விஷயமே ஒரு சந்தேக பார்வையோடு அரை மனதாக நம்புகின்றனர். 

தெலுங்கானாவில் கூட 29 வயதான இளைஞர் ஒருவர் செயலி மூலம் கடன் பெற்று கட்ட தவறியதால், அவருடைய பெற்றோர்களுக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர் குறிப்பிட்ட செயலியை சேர்ந்தவர்கள். தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவே மிரட்டலும் விடுத்து உள்ளனர். இதன் காரணமாக அந்த இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டார். போலீஸ் விசாரணையில், செயலி மூலம் பணம் பெற்ற விவகாரமும், ஆன்லைன் ஹராஸ்மென்ட் நடந்த தகவலும்,தொடர் மிரட்டலால் மன அழுத்தமும் ஒன்று சேர தற்கொலையில் முடிந்து விட்டது அந்த இளைஞரின் வாழ்க்கை.

கூகிள் play store இல் 60 கும் அதிகமான இது போன்ற செயலிகள் தற்போது இருப்பதாகவும், அவை எதுவுமே rbi  இல் பதிவு செய்யப்பட வில்லை என்பதையும், அக்குறிப்பிட்ட செயலி குறித்து ஆராயும் போது சைனீஸ் backround கொண்டதாகவும், நாம் தொடர்பு கொள்வதற்கு எந்த எண்ணையும் கொடுக்காமலும் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி பல பகீர் தகவலை தெலுங்கனா போலீசார் சென்ற 2 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த இளைஞரின் தற்கொலை விஷயத்தில் எச்சரித்தனர்.

rbi இல், ரிஜிஸ்டர் செய்த செயலியா இல்லையா என்பது கூட ஆராயாமல் இப்படி, கடன் பெற்ற பலரும் இது போன்ற விஷயங்களில் சிக்கி தவிப்பதும், அதனை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு இருப்பதும், மன உளைச்சலுக்கு ஆளாவதுமாக இருக்கின்றார்கள் பலர். விழித்திக்கொள்ளுங்கள். இது போன்ற விஷயங்களில் பாதிக்கப்பட்டு இருந்தால் தாராளமாக நம்மை காக்கும் காவல் தெய்வமான தமிழக காவல்த்துறையிடம் "தெரிவியுங்கள்". ஓர் விடியல் கிடைக்கும். அதைவிட மிக முக்கியமானது. பணத்தை கடனாக பெரும் போது  அதனை திருப்பி செலுத்த வேண்டும் என்பதனை மறக்க கூடாது.